Tuesday, November 19, 2024
Homeகல்விஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு #நவ்ரு (Nauru)...!

ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு #நவ்ரு (Nauru)…!

- Advertisement -
nauru-small-island-australia-kidhours
nauru-small-island-australia-kidhours

ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு #நவ்ரு (Nauru).
ஜனத்தொகை 10,000 மட்டுமே. தீவின் நீளம் 5 கி.மீ, அகலம் 3 கிமீ. 30 நிமிடத்தில் சுற்றிவரக்கூடிய நாடு. மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது.

- Advertisement -

ஆம்…தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் எச்சமிட்டு அவை முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன. பாஸ்பேட் சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு,வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது.

அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின. பாஸ்பேட்டை வெட்டி எடுத்தன.
அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர்.

- Advertisement -

அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய்களை அரசால் கொடுத்திருக்க முடியும். அந்த பணத்தை என்ன செய்தார்கள்? எல்லாருக்கும் இலவசமாக உணவு, டிவி, எலெக்ட்ரானிக்ஸ் என வாங்கிகொடுத்தார்கள்.

- Advertisement -

அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள். ஹவாயி, நியூயார்க், சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன. ஒரு நபருக்காக விமானம் சிங்கப்பூர் போன கதை எல்லாம் உண்டு. போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள்.

ஆளே இல்லாத ஓட்டலில் ஐந்து மில்லியன் டாலர் செலவு செய்து எல்லாம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள். சுமார் பதினைந்து வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள் மக்கள். அதன்பின் திடீர் என ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டது. கம்பனிகள் விடைபெற்றார்கள். அரசின் வருமானம் நின்றது.

விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள். மக்கள் உழைக்க முடியாதவண்ணம்
மிக குண்டாக இருந்தார்கள். இளையதலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.

Participants_of_a_walk_against_Diabetes_and_for_general_fitness_around_Nauru_kidhours-scaled.jpg
Participants_of_a_walk_against_Diabetes_and_for_general_fitness_around_Nauru_kidhours.jpg

பாஸ்பேட் சுரண்டபட்டு மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டிருந்தது
அதன்பின் வாழ்க்கைதரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசு தன் நாட்டு குடியுரிமையை காசுக்கு விற்றது. கள்ளகடதல்காரர்கள், அல்கொய்தா, மாபியா கும்பல்கள் எல்லாம் நவுரு வங்கியில் பணத்தை போட்டு கருப்பை வெள்ளை ஆக்கினார்கள்.

கடைசியாக உலகநாடுகள் நவ்ரு மேல் பொருளாதார தடை விதிக்க மக்கள் மறுபடியும் ஏழ்மை நிலைக்கு போனார்கள். இன்று உலகின் மிக ஏழ்மை நிரம்பிய, உலகின் மிக குண்டானவர்கள், ஆரோக்கியகுறைவானவ்ர்கள் இருக்கும் நாடாக நவ்ரு ஆகிவிட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியால் தான் மக்கள் ஒருவேளை சோற்றை உண்கிறார்கள்.

“பைனான்சியல் டிசிப்ளின் Financial Discipline” இல்லையெனில் வீட்டுக்கும் இதே நிலைதான், நாட்டுக்கும் இதே நிலைதான். நூறு வருடங்களாக உருவாக்கிய சொத்துகளை கட்டிகாக்க தெரிவது சம்பாதிக்க தெரிவதை விட முக்கியம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.