Zebra Essay In Tamil சிறுவர் கட்டுரை
நம்மை கவரும் மிருகங்களில் வரிக்குதிரையும் ஒன்று. இந்த வரிக்குதிரைகளை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இதுகுதிரை இனத்தை ச்சேர்ந்தது. உடல்முழுவதும் வரிகளாக இருப்பதால் இது வரிக்குதிரை என்றே அழைக்கப்படுகிறது.
இது பாலூட்டி இனத்தை சார்ந்தவை. இவற்றின் உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இவைகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக வாழ்பவை.
நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 – 2 மீட்டர் உயரமும் 2 – 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும்.இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.இந்தக் கேள்விக்குப் பலரும் பலவித மான பதில்களைக் கூறியிருந்தாலு ம் இன்னும் சரியான விடை கிடைக்க வில்லை என்பது தான் உண்மை!
ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதாக விலங்கியலாள ர்கள் கருதுகின்றனர். அடிப்படைக் கார ணமாக அவர்கள் கூறுவது அபாயகர மான விலங்குகளிடமிருந்து தப்பிப்பத ற்காகத்தான் இப்படி வரிகள் உள்ளன என்கிறார்கள்.
ஆப்பிரிக்கக் காடுகளில் காற்றில் எந் நேரமும் அசைந்து கொண்டி ருக்கும் நீண்ட கோரைப் புற்களின் நடுவே வரிக் குதிரைகளை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது!
இந்தப் புற்களின் நடுவே ஒரு வரிக்குதிரை அசையாமல் எவ்வள வு நேரமானாலும் நிற்க முடியும். அப்படி நிற்பது அதைத் தாக்க வரும் சிங்கத்து க்குத் தெரியவே தெரியாதாம்!
அதெப்படி? வரிக்குதிரையின் வரிகள் கருப்பு நிறத்திலும் சுற்றியு ள்ள புற்கள் பச்சை வண்ணத்திலும் இருக்கும் போது எப்படித் தெரியாமல் போகும் என்று வியப்பாக இருக்கிறதல்லவா? நிறக் குருடு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! பல நிறங்களைப் பகுத்தறி ய முடியாமல் எல்லாமே கறுப்பு-வெள்ளையாகத் தெரியும் நிலை தான் நிறக்குருடு. பல மிருகங் களைப் போலவே காட்டு ராஜா சிங்கமும் ஒரு நிறக்குருடு! ஆகவே, அதற்குப் புற்களுக்கும் வரிக ளுக்கும் வித்தியாசம் தெரியாது.
வரிக்குதிரைகளின் வரிகள் தனித் தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன் னொறு வரிக் குதிரையைப் போல இருப்பதில்லை. மனிதர்களின் கை விரல் ரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு-வெள் ளை வரிக்கோடுகள் கொண்டவை . வரிகள் முன்புறம் நெடுக்குக் கோடுகளாகவும் பின்புறமும் கால் களிலும் கிடைக்கோடுகளாக வும் இருக்கின்றன.
வரிக்குதிரைகள் மேயும்போது, எல் லாம் ஒரே திசையில் திரும்பிய படி இருக்கும். ஆனால், அவற்றில் ஒன்று மட்டும் எதிர்திசையில் திரும்பி, பின் பக்கமாக ஏதாவது ஆபத்து வருகிற தா என்று பார்த்துக் கொண்டிருக்கும்.
காட்டில் தனியாக ஒரு வரிக்குதிரை மட்டும் மேய்வதாக இருந்தா ல், அது தனக்குத்துணையாக ‘காங்கோனிஸ்’ என்னும் ஒரு வகை மானைச் சேர்த்துக்கொள்ளும்
வரிக்குதிரை ஓய்வெடுக்கும்போது, அம்மான் நின்றபடியே சுற்றும் முற்றும் கவனித்துக்கொண்டிருக்கும். ஆபத்து வரும் போல் தெரிந்தால், எச்சரிக்கை செய்து, வரிக்குதிரையை எழுப்பி விடும். உஷார் படுத்தி தன்னையும், தன்னை நம்பி ஓய்வெடுக்கும் வரிக் குதிரையின் உயிரைக்காப்பாற்றும்.
வரிக்குதிரையின் உடலில் ஒரு பக்கம் இருக்கிற வரிகள், அதே அமைப்பில், சிறிதும் மாறாமல் அப்படியே மறு பக்கமும் இருக் கும்.பார்க்க சாதுவான பிராணி போல் இருந்தாலும், இது மனிதர்களு க் கு கட்டுப்படாது. மனிதன் இந்த வரிக்குதிரையை அடக்கி தனது கட்டுப் பாட்டில் கொண்டு வர எவ்வளவு முயன்றும் அடங்க வில்லை.
அப்படி மனிதன் கட்டு ப்படுத்த முயன்றாலும் அவனை இது துன்புறுத்தவும் தயங்காது. மேலும் இது குதிரையை போல் அமைதியான விலங்கினம் அல்ல. இவற்றிற்கு பயம் என்பதே அறவே கிடையாது.
Kidhours – Zebra Essay In Tamil, Zebra Essay In Tamil update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.