Saturday, January 18, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஇன்று உலக நீர் தினம்#Worldwaterday#22march#Water#neer_Thinam

இன்று உலக நீர் தினம்#Worldwaterday#22march#Water#neer_Thinam

- Advertisement -

பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்கிறார். தண்ணீர் அவசியம்
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்.1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. நீர்நிலைகளைக் காப்பதும், நீர்வளத்தைப் பெருக்குவதும்தான் இத்தினத்தின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறதுஉலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

- Advertisement -

உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
உலகில் கிடைக்கக்கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவு நீரால் மாசடைந்து விடுகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள், நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

neerthinam_உலக நீர் தினம்
katturaigal

உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிநீர் கிடைப்பதில்லை. உலகம் முழுக்க சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் சுமார் 200 நகரங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதில் தென் ஆப்பிரிக்காவின் உள்ள கேப்டவுண் நகரம் டே ஜீரோ எனப்படும் தண்ணீரில்லா நிலைக்கு சென்றது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், உலக அளவில் தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஈரான், கம்போடியா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், லிபியா உள்ளிட்ட 11 நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியாவில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் 33 சதவீதம்தான் பயனளிக்கிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் நிலை ஆண்டுக்கு ஆண்டு மோசமாகி கொண்டே போகிறது. தமிழகத்தின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு 54 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டர். ஆனால் கிடைப்பது 46 ஆயிரத்து 540 மில்லியன் கன மீட்டர். இதுவும் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைவு, புவி வெப்பம் போன்ற காரணங்களால் சரிந்து கொண்டே போகிறது.

- Advertisement -

இனியும் தண்ணீரைச் சேமிக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில ஆய்வாளர்கள் உரைத்தது போன்று, அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், ‘உயிர்போல் காப்போம்’ என்ற உறுதி மொழியை மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.