World Tamil Weather News உலக காலநிலை
தென்கிழக்கு சீனாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு ஒரு அடியை எட்டியுள்ளது, மேலும் வானிலை ஆய்வாளர்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கின்றனர்.
கனமழையின் பாதிப்பல் மத்திய மற்றும் தெற்கு சீனாவின் சில பகுதிகள் இந்த வாரம் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் தத்தளிக்கின்றன. இந்த கடுமயான வானிலை குறைந்தது 17 இறப்புகளுக்கு வழிவகுத்தது, மேலும் நிலை இன்னும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவின் ஹுனான் மாகாணம் மற்றும் தெற்கு குவாங்சி மற்றும் குவாண்டாங் பகுதிகள் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களாகும். இந்த பகுதிகளில் உள்ள வானிலை ஜூன் 5 முதல் 8-16 அங்குலங்கள் (205-405 மிமீ) உள்ளூரில் அதிக அளவு மழை பெய்துள்ளமையை அவதானிக்கலாம்.
ஹுனான் மட்டும், சுமார் 1.8 மில்லியன் குடியிருப்பாளர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 300,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது. 2,700க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது முழுமையாக இடிந்து விழுந்தன.
தொடர்ந்தும் காணாமல்போநேர்களை தேடும் பணி தொடர்கின்றது.
kidhours – World Tamil Weather News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.