World Tamil Tech News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
டிவீட்டுகளில் போட்டோ, வீடியோ போடும்போது சம்பந்தப்பட்டவர்களுடைய அனுமதியைப் பெற்ற பிறகே அதை செய்ய வேண்டும் என்ற புதிய தடையை டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டிவிட்டரைப் பயன்படுத்துபவர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இனி தனிப்பட்ட யாருடைய புகைப்படம் அல்லது வீடியோவைப் போட முடியாது. அதைப் பயன்படுத்தி டிவீட் போட முடியாது. அப்படிப் போட்டால் அந்த டிவீட் நீக்கப்படும் அபாயம் உள்ளது.
புகைப்படம், வீடியோ தவிர, தொலைபேசி எண்கள், முகவரிகள், அடையாளங்கள் உள்ளிட்டவற்றையும் அனுமதி இல்லாமல் பகிர டிவிட்டர் தடை விதித்துள்ளது. இதைக் கூட முழுமையாக ஏற்கலாம். ஆனால் புகைப்படம், வீடியோவைப் போட முடியாது என்று சொல்லியிருப்பது நியாயமற்றதாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த தடையை மீறி யாரேனும் பதிவு போட்டால் அந்த டிவீட் நீக்கப்படும் என்றும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயலதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்ட முதல் நாளே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
புதிய தடையால் யாருடைய புகைப்படத்தையும் போட முடியாது. குறிப்பாக ஒரு அரசியல் தலைவர் குறித்த செய்தியை டிவீட் செய்வதாக வைத்துக் கொள்வோம். அவரது படத்தைப் போட முடியாது. ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வீடியோவைப் போட முடியாது. இப்படி போட்டோ, வீடியோ போடாமல் வெறுமனே தகவல்களை மட்டுமே போட முடியும். அந்தத் தகவலிலும் கூட முகவரியோ, அடையாளமோ, தொலைபேசி எண்களோ இருக்கக் கூடாது என்றும் ஒரு தடை இருக்கிறது. எனவே இனிமேல் டிவீட் போடுவோர் மிக மிக கவனமாகவும், கட்டுப்பாட்டையும் காக்க வேண்டி வரும்.
இந்தப் புதிய தடைக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லஞ்சம் வாங்குவோர், பொது இடங்களில் முறைகேடாக நடப்போர் குறித்த வீடியோக்கள், புகைப்படங்களைப் போட்டு டிவீட் போடுவது அதிகம் உள்ளது. தற்போதைய டிவிட்டர் தடையால் இதுமாதிரியான டிவீட்டுகளைப் போடுவது சிக்கலாகிறது. இதனால் பல தவறுகளை அம்பலப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
இன்னும் சிலர் பராக் அகர்வால் குறித்து டிவீட் போட்டால் அவரது போட்டோவை பயன்படுத்த அவரது அனுமதி வாங்க வேண்டுமா என்றும் கலாய்த்துள்ளனர். இனிமேல் சினிமா நடிகர்கள் நடிகைகள், அரசியல் தலைவர்கள் படங்களை வைத்து டிவீட் போடவே முடியாதா எனறும் பலர் கவலைப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் டிவிட்டரின் இந்த புதிய தடையால் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.
kidhours – World Tamil Tech News twitter in tamil,World Tamil Tech News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.