World Tamil Kids Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் தென்பட்ட பாம்புத்தலைப் போன்ற பாறை அறிவியல் உலகத்தில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
நாசாவின் perseverance rover சிவப்பு கிரகத்தில் புதிய விஷயம் ஒன்றை படம்பிடித்துள்ளது. அந்தப் படமே தற்போது அறிவியல் உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் வைரலாகி வருகிறது. நாசாவின் இந்த perseverance rover பல நாட்களாக செவ்வாய் கிரகத்தில் சுற்றி வருகிறது. மேலும் பல விஷயங்களை படமெடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
பால்வெளியின் அழகான மற்றும் சிவப்பு கிரகமான செவ்வாய் ஒரு க்யூட்டான கிரகமும் கூட. தொலைவிலிருந்து அதை பார்க்கும் போது அதன் ஜொலிக்கும் சிவப்பு நிறம் காண்போரை சிலிர்க்க வைக்கும் அளவு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மிக நீண்ட நாட்களாகவே செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நாசா மற்றும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்து வருகின்றன. உலக பணக்காரரான எலான் மஸக்கும் கூட தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகம் சம்மந்தமாக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறார். இன்னும் சில நாட்களில் போக்குவரத்து சேவையெல்லாம் தொடங்கப்படும் போல..
அத்தகைய செவ்வாய் கிரகத்தில் தான் தற்போது நாசாவின் கேமரா ஒரு அரிய புகைப் படத்தை எடுத்துள்ளனர் அந்த படத்தில் பாம்பு தலை வடிவமைப்பில் ஒரு பாறை ஒன்று இருப்பதும் அதற்கு பக்கத்தில் ஒரு சமதள பாறை இருப்பதும் தெரிய வந்துள்ளது இந்த படம் தான் தற்போது விஞ்ஞான உலகத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பாம்பின் வாய்ப்பகுதி திறந்துள்ளது போல் அந்த பாறைப்பகுதி அமைந்துள்ளது.
நாசாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என பலரும் புகழ்ந்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அறிவியல் காதலர் பலருக்கும் இது விருந்தாக அமைந்துள்ளது.
kidhours – World Tamil Kids Today , World Best Tamil Children News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.