World Tamil Kids News Website சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வங்கதேச நாட்டில் கப்பல் கண்டெய்னரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் சிட்டகாங்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் கண்டெய்னரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த பகுதியே நெருப்பு மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் தீயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு சட்டாகிராம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கண்டெய்னர்களில் கெமிக்கல் பொருள்கள் இருந்ததாகக் கூறுகிறது. இந்த தீ நேற்று இரவு நேரத்தில் பற்றிய நிலையில், சில மணிநேரம் கழித்து நள்ளிரவு வேளையில் வேகமாகப் பரவி வெடிவிபத்தாக மாறியது.
இந்த விபத்து காரணமாக அருகே இருந்த வசிப்பிடங்கள், வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. சம்பவயிடத்தில் 19 தீயணைப்பு படைக் குழுக்கள் தீயை அணைக்க போராடி வருகின்றன. அத்துடன் ஆறு ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணிக்காக தயாராக உள்ளன.
இந்த வெடிவிபத்தில் சிலிண்டர்கள் போன்ற கணமான பொருள்களே அரைக் கிலோமீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாகவும், வானில் இருந்து நெருப்பு மழை பொழிவது போல தோன்றியதாகவும் நேரில் பார்த்த நபர்கள் பதைபதைப்புடன் கூறியுள்ளனர். இந்த துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ரத்த தானம் வேண்டி சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைக்கப்படுகின்றது.
ஏற்கனவே 2020ஆம் ஆண்டு தலைநகர் தாக்காவில் நிகழ்ந்த தீ விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்காவில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 54 பேர் உயிரிழந்தனர்.
Kidhours – World Tamil Kids News Website
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.