Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்பயங்கரம் தேவாலயத்திற்குள் 50 பேர் சுட்டுக்கொலை World Tamil Kids News # Best for...

பயங்கரம் தேவாலயத்திற்குள் 50 பேர் சுட்டுக்கொலை World Tamil Kids News # Best for Tamil Kids

- Advertisement -

World Tamil Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

நைஜீரியாவில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

- Advertisement -
World Tamil Kids News
World Tamil Kids News

இந்த தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிதாரிகள் தேவாலயத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஓண்டோ மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று, ஒண்டோ மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். மேலும் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது கொடூரமானது எனவும் குறிப்பிட்டார்.

 

kidhours – World Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.