World Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ இந்த ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஓர் சுவாரஸ்மான தகவல் இடம்பெற்றுள்ளது. ‘முந்தைய காலங்களில் ஆண், பெண் இரு பாலரிடமும் மிகப்பெரிய வேறுபாடு இருந்ததாகவும், மாணவிகளைவிட மாணவர்களே கணிதப் பாடத்தில் கில்லாடிகளாக இருந்தனர்.ஆனால், தற்போது அந்த வேறுபாடு மாறிவிட்டது. பெண்கள் கணிதத்தில் புலிகளாக மாறி வருகின்றனர்.

கல்வியில் பெண்களின் முன்னேற்றம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. இந்த பாலின வேறுபாடு ஏழை நாடுகளிலும்கூட மறைந்துள்ளது. ஒரு சில நாடுகளில் இந்த பாலின வேறுபாடு அப்படியே எதிர்மறையாக, மாணவர்களைவிட மாணவிகள் சிறப்பாக செயல்படுகின்றனர்.கல்வியில் பாலின சமத்துவமின்மை அகல வேண்டும்.

பெண்கள் தங்களது திறமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இன்னும் அதிகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்’ என்று அந்த ஆய்வறிக்கையில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
kidhours – World Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.