Tuesday, September 17, 2024
Homeசிறுவர் செய்திகள்Haiti - ஹைட்டி அதிபர் படுகொலை World Tamil Kids News...

Haiti – ஹைட்டி அதிபர் படுகொலை World Tamil Kids News best tamil kids

- Advertisement -

world tamil kids news – சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.

“அடையாளம் காணப்படாத ஒரு குழு, குடியரசுத் தலைவரின் வீட்டை தாக்கி, அவரை கொன்றுவிட்டனர். அவர்களில் சிலர் ஸ்பானிஷ் மொழி பேசினார்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ரன” என்று ஹைட்டி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
world tamil kids news Jovenel Moise
world tamil kids news Jovenel Moise

அதிபர் ஜோவனல் மொய்ஸ் மற்றும் அவரது மனைவியும் சுடப்பட்டனர். நாட்டின் முதல் பெண்மணி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், தற்போது கடுமையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.முதல்கட்ட அறிக்கையின்படி, போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) இல் உள்ள அதிபரின் வீட்டில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

- Advertisement -
world tamil kids news Jovenel Moise
world tamil kids news Jovenel Moise

ஹைட்டி அதிபர் மாளிகையும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. அதில், அதிகாலை 1 மணியளவில் அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது என்றும், தாக்குதலில் முதல் பெண்மணியும் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிபரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

kidhours – world tamil kids news

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.