World Tamil Kids Best News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Internet Explorer இன் 27 ஆண்டுகால பயன்பாடு முடிவுக்கு வருகிறதாக microsoftநிறுவனம் தெரிவித்துள்ளது.
வங்கிகள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக Internet Explorer இருந்து வந்தது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் இரு தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது Internet Explorer.
கடந்த 1995 ஆம் ஆண்டு microsoft நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இதை தற்போது அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. Internet Explorer அறிமுகமானதில் இருந்து வங்கிகள், IT நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக அது இருந்தது.அதன்பின்னர் 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது.
பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்த முடிவை microsoft நிறுவனம் எடுத்துள்ளது.
இந்நிலையில் நாளை மறுதினம் முதல் இதனை நிறுத்த உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரில் Internet Explorer உள்கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயனாளர்கள் Internet Explorer அடிப்படை பயன்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் microsoft நிறுவனம் கூறியுள்ளது.
kidhours – World Tamil Kids Best News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.