Nuclear Powered Spacecraft பொது அறிவு செய்திகள்
செவ்வாய் கிரகத்திற்கு அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தைச் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு 30 கோடி மைல் பயணம் செய்ய ஏழு மாதங்கள் ஆகின்றன.
இந்நிலையில் அணுசக்தியால் விண்கலம் இயக்கப்பட்டால் இந்த நாட்களைக் குறைக்கலாம் என நாசா திட்டமிட்டுள்ளது.
இதன் முன்னோடியாக 2025ன் பிற்பகுதியில் அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் அணுசக்தியால் இயங்கும் விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் அணு சக்தியால் விண்கலம் இயக்கப்பட்டால் காலவிரயம் எந்த அளவிற்கு மிச்சமாகும் என தெரியாவிட்டாலும், மின்சார உந்துசக்தியை விட சுமார் 10 ஆயிரம் மடங்கு அதிக உந்துதலை வழங்கும் என எதிர்பார்ப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
Kidhours – nuclear powered spacecraft
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.