World Largest Coral பொது அறிவு செய்திகள்
ஆஸ்திரேலியாவில் காணப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் பகுதியில் குறிப்பட்டத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்மைக் காலமாக குறித்த பவளப்பாறை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதல் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.
இவற்றை அழிந்து வரும் நிலையில் உள்ள இனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் யுனெஸ்கோ பாரம்பரிய குழு கூறியது.
எனினும் அது சுற்றுலா துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்த பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை.இவ்வாறான நிலையில் யுனெஸ்கோ தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், கிரேட் பேரியர் பகுதியில் நீரின் தரம் மற்றும் நிலையான மீன்பிடித்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு யுனெஸ்கோ பாராட்டு தெரிவித்தது.யுனெஸ்கோவின் இந்த முடிவை வரவேற்பதாக ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் துறை மந்திரி டான்யா பிலிபெர்செக் கூறினார்.
Kidhours – World Largest Coral
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.