Floods 39 Dead உலக காலநிலை செய்திகள்
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த அளவுக்கு அதிகமான மழை வீழ்ச்சியினால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்த பாரிய வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு இதுவரையில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும், 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் பிரேசில் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. அங்கு நிவாரண நடவடிக்கைகள் மிகவும் துரிதகதியில் நடைமுறைப்படுத்தி வருவதாக தேசிய மற்றிம் சர்வதேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Kidhours – Floods 39 Dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.