Europe Floods உலக காலநிலை செய்திகள்
ஐரோப்பிய நாடான ஸ்பெய்னில் கான் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஆக உயர்வடைந்துள்ளது.
அதாவது ஸ்பெய்னின் வெலென்சியா பகுதியில் இந்த பாரிய அனர்த்தம் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறவிருந்த பிரபல மோட்டார் பந்தயப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திடீரென வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வெள்ளத்தில் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயர்வடையும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Kidhours – Europe Floods
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.