World Tamil Children News திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசிடம் இதுதொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய பிளாஸ்டிக் கழிவின் அளவு 42 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். இது சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கழிவுகளை விட 2 மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு அமெரிக்கரும் வருடத்திற்கு தலா 130 கிலோ பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகிறாராம். 2வது இடத்தில் தென் கொரியா வருகிறது. அங்கு தனி நபர் உருவாக்கும் வருடாந்திர கழிவு 88 கிலோவாகும்.
இந்த அறிக்கையை தாக்கல் செய்த குழுவின் தலைவரான மார்கரெட் ஸ்பிரிங் கூறுகையில், 20வது நூற்றாண்டின் மிகப் பெரிய அதிசய கண்டுபிடிப்பு பிளாஸ்டிக். ஆனால் அதுதான் உலக அளவில் மிகப் பெரிய கழிவுப் பொருளாக மாறி நிற்கிறது. 1966ம் ஆண்டு உலக அளவில் பிளாஸ்டிக் கழிவின் அளவானது 20 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது 2015ம் ஆண்டு 381 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்ந்து விட்டது. அதாவது 50 வருடங்களில் 20 மடங்கு குப்பை அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் கப்பல்கள் மூலம்தான் கடலில் பிளாஸ்டிக் குப்பை சேர்ந்து வந்தது. ஆனால் இப்போது தரைப் பரப்பிலிருந்தும் குப்பைகள் அதிக அளவில் வருகின்றன. ஆறுகள், ஓடைகள் மூலமாக கடலுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் வந்து சேருகின்றன.
பிளாஸ்டிக் குப்பைகளால் கடலில் வாழும் ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகளை உண்ணும் மீன் உள்ளிட்டவற்றால் மீண்டும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இந்த வேகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து வந்தால், 2030ம் ஆண்டு வாக்கில் உலக நாடுகளின் மொத்த பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு 53 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து விடும். இது உலக கடல்களில் வருடத்திற்குப் பிடிக்கப்படும் மீன்களில் பாதி அளவு ஆகும் என்று அவர் கூறினார்.
kidhours – World Tamil Children News, World Tamil Children News entertainment
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.