Saturday, November 9, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலகின் மிக வயதான மனிதர் 127 வயது World Ageist Man

உலகின் மிக வயதான மனிதர் 127 வயது World Ageist Man

- Advertisement -

World Ageist Man  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகின் மிக வயதான மனிதர் என்று கூறப்படும் ஜோஸ் பாலினோ கோம்ஸ் தனது 127ஆவது வயதில் காலமானார். பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ வரும் 4ஆம் திகதி தனது 128ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்தார்.

இந் நிலையில், மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக பாலினோவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

- Advertisement -

ஒகஸ்ட் 4, 1895 இல் பிறந்த ஜோஸ் பாலினா, முதல் மற்றும் 2ஆம் உலகப் போர் மற்றும் மூன்று பெருந்தொற்று நோய் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்.வில்லியன் ஜோஸ் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்ற அதிகாரி, ஜோஸ் பாலினாவின் வயது துல்லியமானது என்றும், அவர் 1900க்கு முன் பிறந்தவர் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

எனினும் ஜோஸ் பாலினோவின் பிறப்பு பற்றிய விவரங்கள் துல்லியமாக இல்லாததால், அவரின் ஆவணங்களை உலக சாதனைகளுக்கான கின்னஸ் அமைப்பு ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.அதேவேளை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மரியா பிரன்யாஸ் மோரேரா உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜோஸ் பாலினா ஒரு எளிய மற்றும் அடக்கமான மனிதர் என்றும் தொழில்மயமான எதையும் விரும்புவதில்லை என்றும் அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அவர் கிராமப்புறங்களில் உள்ள பொருட்களையே அதிகம் விரும்பினார் என்றும், தனது சொந்த பண்ணையில் கோழிகள் மற்றும் பன்றிகளை வளர்த்தார் என்றும் தெரிவித்தனர்.
ஜோஸ் பாலினா தனது 7 பிள்ளைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 எள்ளுப் பேரக்குழந்தைகளையும் கொண்டிருந்தார்.

 

Kidhours – World Ageist Man

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.