World Food Safety Day in Tamil பொது அறிவு – உளச்சார்பு
ஆண்டுதோறும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். உணவுப்பழக்க நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு, மேலாண்மை நுட்பங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் கொரோனா பெருந்தொற்று உலக மக்களை ஒரு வருடத்திற்கும் மேலாக வாட்டி வதைத்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தற்போது வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி, கொரோனா நடத்தை விதிமுறைகள் ஆகியவை எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் முக்கியம். அந்த வகையில், கடந்த ஒரு வருடமாக மக்களிடையே பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவமும் பிரபலமாகி வருகின்றன. துரித உணவுகளால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் பற்றியும் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று உலக உணவு பாதுகாப்பது தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் உருவான வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
பின்னணி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் சில உணவால் பரவும் நோய்களைத் தடுத்து இறுதியில் அவற்றை ஒழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூட்டு முயற்சி ஆகும். உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் சுகாதார அபாயங்களை அகற்ற பிற உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிக மோசமான தேவை கொரோனா நெருக்கடியில் நிலவுவதை போல முன்னெப்போதும் இருந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, உணவுப்பழக்க நோய்கள் பரவுவதை அகற்றுவது, விவசாய களங்களில் ஆரோக்கியமான, சுகாதாரமான நடைமுறைகளை வளர்ப்பது, சந்தை மற்றும் உணவு பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய எல்லா இடங்களிலும் இது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது.
kidhours – World Food Safety Day in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.