Emergency Vehicle Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் மருத்துவ உதவி விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் நோயாளி உட்பட அதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு நெவாடாவில் உள்ள மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விமானமானது விபத்துக்குள்ளானது. இதில் நோயாளி உட்பட, பயணித்த ஐவரும் பலியானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் லியோன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவிக்கையில், நெவாடாவின் ஸ்டேஜ்கோச்சில் இருந்து இரவு 9:15 மணியளவில் விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் குழு, 2 மணி நேர தீவிர தேடுதலுக்கு பின்னர் விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். ஸ்டேஜ்கோச் பகுதியானது சுமார் 2,500 பேர்கள் மட்டும் குடியிருக்கும் கிராமமாகும்.
தற்போது விபத்தில் சிக்கிய மருத்துவ உதவி விமானமானது Care Flight என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாககும். இந்த நிறுவனமானது ஹெலிகொப்டர் மற்றும் குட்டி விமானங்கள் ஊடாக ஆம்புலன்ஸ் சேவையை முன்னெடுத்து வருகிறது.
விபத்தில் சிக்கிய ஐவரில் நோயாளியும் அவரது உறவினரும் விமானியும், நர்ஸ் மற்றும் மருத்துவ உதவியாளரும் பலியானதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இந்த ஐவரது உடலையும் அடையாளம் கண்டுள்ளதாக Care Flight நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ரெனோவில் உள்ள தேசிய வானிலை சேவையால் வழங்கப்பட்ட பனிப் புயல் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.
KIdhours – Emergency Vehicle Accident
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.