Wednesday, January 22, 2025
Homeசிறுவர் செய்திகள்ஒரே விரலில் 130 கிலோ தூக்கி கின்னஸ் சாதனை World Best Tamil Kids Website

ஒரே விரலில் 130 கிலோ தூக்கி கின்னஸ் சாதனை World Best Tamil Kids Website

- Advertisement -

World Best Tamil Kids Website சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அசாத்திய விஷயங்களை அசால்டாக செய்து சாதனை மனிதர்களாக வளம் வருபவர்களில் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளவர் தான் இந்த ஸ்டீவ் கீலர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் தற்காப்பு கலை நிபுணர். அத்துடன் பளு தூக்கும் திறமையும் கொண்டவரான இவர் தற்போது புதிய கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். தன்னுடைய நடு விரலை வைத்து மட்டும் 129.50 கிலோ தூக்கி இவர் ஒற்றை விரலில் அதிக எடை தூக்கிய நபர் என்ற சாதனையை தற்போது புரிந்துள்ளார்.

World Best Tamil Kids Website
World Best Tamil Kids Website

129.50 கிலோ எடை கொண்ட ஜிம் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் ஆறு இரும்பு வட்டங்களை ஒன்றாக வைத்து அதை தனது நடு விரலில் தூக்கி சுமார் எட்டு வினாடி நேரம் நிறுத்தியுள்ளார் ஸ்டீவ். இந்த சாதனையை இவர் கடந்த பிப்ரவரி மாதம் புரிந்த நிலையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவருக்கு இப்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதன் மூலம் 10 ஆண்டு கால கின்னஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முந்தைய சாதனையை பெனிக் இஸ்ரயேல்யான் என்ற நபர் 121.70 தூக்கி படைத்திருந்தார். அதேபோல், அர்மேனியாவின் சுரேன் அக்பக்யான் என்பவர் பலம் குறைவானதாக கருதப்படும் சுண்டு விரலில் 110 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க: குறைந்த உணவுக்கு அதிக செலவு செய்யும் அவல நிலையில் நலிவடைந்த நாடுகள் – ஐநா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கராத்தேவில் கறுப்பு பெல்ட் வைத்திருக்கும் நபரான ஸ்டீவ் இந்த பளு தூக்குவதை தனது அன்றாட பயிற்சியில் ஒன்றாக வைத்துள்ளார். தனது சாதனை குறித்து ஸ்டீவ் கூறுகையில், இதை தூக்குவதற்கு மிகவும் சிரமமாகவும் வலியாகவும் இருந்தாலும், எனது விரல் பலம் வாய்ந்ததாக இருப்பதை நினைத்து பெருமையாக உள்ளது. இந்த சாதனையை முறியடித்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். எனது தந்தை மூலமாக தான் எனக்கு இந்த பயிற்சி அறிமுகமானது. அவருக்கு மிகவும் நன்றி எனக் கூறினார்.

 

kidhoours – World Best Tamil Kids Website

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.