World Best Tamil General Knowledge பொது அறிவு – உளச்சார்பு
எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான தானியங்கி வானிலை நிலையத்தை (automatic weather station) சீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நிறுவி உள்ளனர். புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த ஆட்டோமேட்டிக் வெதர் ஸ்டேஷன் உலகின் மிக உயரமான சிகரத்தில் இருந்து வானிலை தரவுகளை சேகரிக்கவும், ஆய்வு செய்யவும் உதவும்.
![உலகின் மிக உயரமான வானிலை நிலையம் World Best Tamil General Knowledge 1 World Best Tamil General Knowledge](https://www.kidhours.com/wp-content/uploads/2022/05/Untitled-design-59-2.jpg)
சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்படும் இந்த ஆட்டோமேட்டிக் வெதர் ஸ்டேஷன் மிக கடுமையான வானிலை மாற்றங்களின் கீழ் கூட 2 ஆண்டுகள் வரை நீடித்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரவு பரிமாற்றத்திற்கான (data transmission) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புடன் பொருத்தப்பட்டு உள்ளது. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள கிங்காய்-திபெத் பீடபூமி, உலகின் கூரை, ஆசியாவின் நீர் கோபுரம் மற்றும் பூமியின் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது.
சீனா-நேபாள எல்லையில் உள்ள உலகின் மிக உயரமான மலையின் உச்சியில் பனி மற்றும் பனி கட்டியின் தடிமனை அளவிட இந்த வானிலை நிலையம் ஒரு உயர் துல்லி ரேடாரைப் பயன்படுத்துகிறது. இந்த வானிலை நிலையம் நிறுவப்பட்டு உள்ளதன் மூலம் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த முந்தைய உலக சாதனையான எவரெஸ்டின் தெற்குப் பகுதியில் 8,430 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்ட வானிலை நிலையத்தின் சாதனையை, சீனாவின் இந்த புதிய வானிலை நிலையம் முறியடித்து உள்ளது.
Chinese Earth Summit Mission 2022-ன் 13 உறுப்பினர்கள் கடந்த மே 4ம் தேதி அதிகாலை 3 மணிக்கு 8,300 மீட்டர் உயரத்தில் தங்கள் முகாமில் இருந்து வெளியேறி, வானிலை நிலையத்தை அமைக்க வேண்டிய 8,830 மீட்டர் உயரத்தை அடைந்து, மதியம் 12:46 மணியளவில் இந்த சாதனை வானிலை நிலையத்தை நிறுவியதாக சீனா சென்ட்ரல் டெலிவிஷன் தகவல் வெளியிட்டு உள்ளது.
kidhours – World Best Tamil General Knowledge , World Best Tamil General Knowledge update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.