World Bank Support To Ukraine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடர்ந்து 7 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்,
உக்ரைனுக்கு உதவியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பொருளாதார வகையிலும், ஆயுத வகையிலும் உதவி வருகிறது.
அதிநவீன மேற்கத்திய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளுடன் போராடி வந்த உக்ரைன் படைகள் ரஷ்யா கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் போரில் சேதம் அடைந்த உக்ரைன் நகரங்களின் புறனமைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக உலக வங்கி 530 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த நிதித் தொகுப்பை லண்டன் 500 மில்லியன் டாலர்களும், டென்மார்க் 30 மில்லியன் டாலர்களும் வழங்குவதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை உக்ரைனுக்கு வழங்கவிருந்த 13 பில்லியன் டாலர்களில் 11 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kidhours – World Bank Support To Ukraine
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.