Sunday, February 23, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலக வங்கியின் செயற்பாடு

உலக வங்கியின் செயற்பாடு

- Advertisement -

உலக வங்கியை இன்டர்நேஷனல் பேங்க் ஃபார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டெவலப்மென்ட் (International bank for reconstruction and development) என்ற பெயரில் 1944-ம் ஆண்டு உருவாக்கினார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்பது நோக்கமாகக் கூறப்பட்டது. வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் கவனத்தில்கொண்டு இந்த வங்கி செயல்படுகிறது. உலக வங்கிக்கான மூலதனத்தில் பல நாடுகள் பங்களிப்பு செய்கின்றன. அதிகபட்ச பங்களிப்பை அமெரிக்கா செய்கிறது. எனவே, இதில் அமெரிக்காவின் கையே ஓங்கியிருக்கிறது. உலக வங்கி, அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் பெரும்பாலும் அமெரிக்காவின் திட்டத்தையே இது செயல்படுத்தும். அமெரிக்கா தவிர, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதில் முக்கிய பங்களிப்பு தருகின்றன.

- Advertisement -

ulaka vanki seyarpadu

உலக வங்கி தொடங்கப்பட்டது முதலாகவே இந்தியாவும் இதில் ஓர் உறுப்பு நாடாக உள்ளது. ஆனால், இதில் நம்முடைய பங்களிப்பு குறைவு. உலக வங்கியிலிருந்து கடன் பெறும் நாடுகள், அதைத் திருப்பித்தர உத்தரவாதம் அளிப்பதால், கடனுதவி அளிப்பதும் திரும்பப்பெறுவதும் நன்முறையில் நடக்கிறது. உலக வங்கியில், மற்ற வங்கிகளைவிட அதிக நிதி மூலதனம் உள்ளது. சர்வதேசச் சந்தையில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதால், உலக வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவு. ஆனால், அந்தக் கடனுதவியைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் கடினமாக இருக்கும். இதன்மூலம்தான் மற்ற நாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். உலக வங்கி கடனுதவி கொடுப்பதன்மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கையைக்கூட தீர்மானிக்கும் அளவுக்கு வலிமைவாய்ந்ததாக இருக்கிறது.
தனியார்மயமாக்கத்தில் உலக வங்கியின் பங்களிப்பு பெரிது. ஒரு நாடு என்றில்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் தனியார்மயமாக்கலுக்கு உலக வங்கி ஒரு காரணமாக இருக்கிறது. நம் நாட்டில் உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டதற்கு உலக வங்கியின் கடனுதவியே காரணம். சாலைப்பயன்பாட்டை சமூக நோக்கில் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுவந்த `பெருமை’ உலக வங்கியையே சாரும்.வெளிநாட்டு வங்கிகளையும் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒரு நாட்டுக்குள் கொண்டுவந்ததற்கு உலக வங்கியே முக்கிய காரணம். பிரான்ஸ், சீனா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், தற்போது அதிகளவான நாடுகள் வணிகம் செய்கின்றன.ஜி-7 கூட்டத்தில், எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவருவது என்பது குறித்து பல்வேறு தீர்மானங்களைக் கொண்டுவருவார்கள். அதேபோல, உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டம் ஆண்டுதோறும் டாவோஸ் நகரில் நடைபெறும். இதில் உலகம் முழுவதுமுள்ள முன்னணி நிறுவன மேலாளர்கள், பெரிய வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் ஜி-7 கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
கடந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், `இண்டஸ்ட்ரியல் ரெவெல்யூஷன் 4′ என்ற தலைப்பில், அடுத்துவரும் காலங்களில் உலகத்தை ஆளக்கூடிய ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. இதன்மூலம் உலக நாடுகள், இத்தகைய தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியெடுக்கும்போது உலக வங்கி கடனுதவி வழங்கும்.

- Advertisement -

ulaka vanki seyarpadu

- Advertisement -

சர்வதேச நாணய நிதியத்துக்கும் (International Monetary Fund) உலக வங்கிக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. 2008 பொருளாதாரப் பிரச்னைக்குப் பின், வங்கிகளைக் கட்டுப்படுத்துவதற்காக `ஃபைனான்சியல் ஸ்டெபிலிட்டி போர்டு’ (FSB) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உறுப்பினராக இருக்கின்றன. இதன்மூலமாகவும் உலக வங்கியின் கடனுதவி மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்று ஒன்றுக்கொன்று தொடர்பின்மூலம்தான் உலக வங்கி செயல்பட்டு வருகிறது.தனியார் நிறுவனங்களின் உதவியோடு பல்வேறு திட்டங்களை உலக நாடுகளில் செயல்படுத்துவதும் உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்போது வலிந்து கடனுதவி தர முன்வருவதும் அதற்கான நிபந்தனைகளை விதிப்பதும் என மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கம்தான் உலக வங்கியின்மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை உலக வங்கியில் கடன் வாங்கி, அதன்மூலம் எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. ஓரளவு முன்னேற்றம் பெறுவதும், பின்னர் பொருளாதாரச் சரிவைச் சந்திப்பதுமாகத்தான் சுழற்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.