World 1st Plant Vaccine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைவதும், அதிகரிப்பதும் தொடர்கதையாக உள்ளது. ஒருவகை கொரோனாவை அழித்தால், அதைவிட வீரியமான மற்றொரு வகை உருவாகி மனிதர்களை பாடாய்படுத்தி வருகிறது. எனவே உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தொற்றை எதிர்த்து போராடக்கூடிய சக்தி வாய்ந்த தடுப்பூசியை கண்டறியும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் மூலமாக கொரோனாவை எதிர்க்க முடிந்தாலும், அதன் வீரியமான வெரியண்ட்களை எதிர்கொள்வது கேள்விக்குறியாக உள்ளது. எனவே தான் தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கனடா அரசு உலகிலேயே முதன் முறையாக தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை கனடா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கனடாவின் கியூபெக் நகரில் அமைந்துள்ளது மெடிகாகோ என்ற நிறுவனம் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ள “கோவிஃபென்ஸ்’’ என்ற தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாவர அடிப்படையிலான புரத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய தயாரிக்கப்பட்டுள்ள முதல் தடுப்பூசி என்ற பெருமையும் இந்த மருந்துக்கு கிடைத்துள்ளது.
கோவிஃபென்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி தாவர அடிப்படையிலான வைரஸ் “SARS-CoV-2 ஸ்பைக் புரதத்தின் துகள்களால் (VLP) உருவாக்கப்பட்டுள்ளது. இது டிஎல்-ஆல்ஃபா-டோகோபெரோல், பாலிசார்பேட் 80, பாஸ்பேட்-பஃபர் சால்ட், squalene ஆகியவற்றைக் கொண்ட கிளாக்ஸோவின் AS03 துணைப்பொருளைப் பயன்படுத்துகிறது.
மேலும் பொட்டாசியம் பாஸ்பேட் மோனோபாசிக் அன்ஹைட்ரஸ், அன்ஹைட்ரஸ் சோடியம் குளோரைடு, சோடியம் பாஸ்பேட் டைபாசிக் அன்ஹைட்ரஸ் மற்றும் ஊசி போடுவதற்கான தண்ணீர் ஆகியவை அடங்கும்.
2. எத்தனை டோஸ்கள் செலுத்த வேண்டும்?
மெடிகாகோ’ நிறுவனம் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 18 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டு ‘டோஸ்’ செலுத்தலாம் என கனடா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
3. கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா?:
மருத்துவ பரிசோதனைகளின்படி,கொரோனாவுக்கு எதிராக 18 முதல் 64 வயதுடையவர்களிடையே நடத்தப்பட்ட சோதனையில், தடுப்பூசி 71% சிறப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
4. பக்க விளைவுகள்:
தாவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கோவிஃபென்ஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்பவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஊசி போட்ட இடம் சிவந்து போவது, புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – World 1st Plant Vaccine , World 1st Plant Vaccine update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.