Thursday, November 21, 2024
Homeபெற்றோர்சிறுவர் ஆரோக்கியம்தமிழர்கள் ஏன் உணவை கையில் சாப்பிடுகிறார்கள் ? !!

தமிழர்கள் ஏன் உணவை கையில் சாப்பிடுகிறார்கள் ? !!

- Advertisement -
Eating by Hand-kidhours
Eating by Hand-kidhours

கைகளில் உணவு பிசைந்து சாப்பிடுவதிலும் தனி ருசி இருக்கிறது. நம் தமிழர்களுக்கு எத்தனை விலை உயர்ந்த ஸ்பூன்களில் சாப்பிட்டாலும் கைகளில் பிசைந்து சாப்பிட்டால்தான் உண்ட திருப்தி இருக்கும். அந்த திருப்தி எவ்வாறு வருகிறது என்பது தெரியுமா?

- Advertisement -

ஆயுர்வேதம் நம் கைகள்தான் உடலின் மிகப் பெரிய வரம் என்கிறது. ஒவ்வொரு விரலும் ஒவ்வொன்றைச் சொல்கின்றன.
அதாவது கட்டை விரல் நெருப்பையும், ஆள் காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சிறுவிரல் நீரையும் கொண்டிருக்கின்றன. இவை மூன்றையும் ஒன்று சேர்த்து சாப்பிடும் போது உணவின் சுவை மூளையை எட்டுகிறது.

அந்த உணவை தொடும் உணர்வு கவனச் சிதறல் இல்லாமல் உணவின் ருசி, மணம் அறிந்து உண்ண வைக்கும். இதைத் தவிர…

- Advertisement -
  • ஜீரண சக்தியை அதிகரிக்கும் : நம் உள்ளங்கைகளில் ’நார்மல் ஃப்ளோரா’ () என்கிற பாக்டீரியா இருக்கிறது. அது சுற்றுச் சூழல் பாதிப்பால் உட்செலுத்தப்படும் சில கிருமிகளை அழிக்க வல்லது.
  • அதேபோல் அந்தக் கிருமியால் வாய், தொண்டை மற்றும் குடல் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. மேலும் இது ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
  • அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம் : பொதுவாக கைகளில் சாப்பிடும்போது மெதுவாகவே உண்போம்.
    அதனால் நீங்கள் மென்று உண்ணும் போது வயிறு அதை விரைவாக ஜீரணித்து விடும். இதனால் உங்களுக்கும் அந்த உணவு போதுமானதாக இருக்கும்.
    இதனால் அதிகமாக உண்ண மாட்டீர்கள்.
eat-by-hands-kidhours
eat-by-hands-kidhours

அதேபோல் நாம் கைகளை குவித்து சாப்பிடத் துவங்கும் போதே, மூளை நம் உடலுக்கு ஜீரண சக்திக்கான கட்டளையை அனுப்பிவிடும். உடனே கல்லீரலும் ஜீரண சக்திக்கான ரசாயனத்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடும்.

- Advertisement -
  • உடல் நோய்கள் வராது :
    கைகளில் சாப்பிடுவது உடல் தசைகளுக்கான உடற்பயிற்சி போன்றது. இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது.
  • உடல் சுறுசுறுப்பு அடைகிறது.
  • உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரத்தக் கொதிப்பு நோயும் குறைவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் பல நோய்கள் கைகளின் மூலமாகவும் உடலுக்குப் பரவுகின்றன.

இதனால் குறைந்தது உணவு உண்பதற்காகவே ஒரு நாளைக்குக் 3 முறையாவது கைகளைக் கழுவும் பழக்கம் கொண்டிருப்போம். இதனாலேயே நோய்த் தொற்றுக் கிருமிகள் அழிந்துவிடுகின்றன.

தகவல்கள் : இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் ஆகிய இடங்களிலும் கைகளில்தான் உணவை உட்கொள்கிறார்கள்.
அமெரிக்காவிலும் கைகளில் உண்பதால் ஏற்படும் நன்மைகளைத் தெரிந்து கைகளில் உண்ண, பழகி வருகிறார்கள்.
அதேபோல் அமெரிக்க ரெஸ்டாரண்டுகளில் கிடைக்கக் கூடிய இந்திய உணவுகள், மெக்ஸிகன் உணவுகள், மத்திய கிழக்கு உணவுகளை அமெரிக்கர்கள் உண்ணும்போது கைகளில்தான் உண்ணுகிறார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.