Sunday, October 6, 2024
Homeகல்விகட்டுரைகட்டுரை வரவேற்பு பேச்சு # Welcome speech Essay in Tamil #...

கட்டுரை வரவேற்பு பேச்சு # Welcome speech Essay in Tamil # Tamil Essay

- Advertisement -

Welcome speech Essay

- Advertisement -

ஒரு நல்ல வரவேற்பு பேச்சு ஒரு நிகழ்விற்கான தொனியை அமைப்பதற்கான சிறந்த வழியாகும். நிலைமையைப் பொறுத்து இது எளிமையானதாகவோ அல்லது முறையாகவோ இருக்கலாம். நிகழ்வின் கண்ணோட்டத்தை அளிப்பதற்கு முன் பார்வையாளர்களை வாழ்த்துவதன் மூலம் உங்கள் உரையைத் தொடங்குங்கள். அடுத்த பேச்சாளரை அறிமுகப்படுத்தி, கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் உரையை முடிக்கவும்.

உங்கள் உரையை எழுதும் போது, ​​உங்களுக்கு சரியான தொனி தெரியும் என்பதையும், உங்கள் பேச்சு நேர வரம்பைக் கடைப்பிடிப்பதையும், நீங்கள் எழுதும் போது உங்கள் பேச்சின் நோக்கத்தை மனதில் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை விழாவிலும் முதன்மையான இத்தகைய பேச்சு கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன,இந்த கட்டுரையில் பள்ளி விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் முறைகள் ,மரியாதையை நிமித்தங்கள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன

- Advertisement -

எமது பள்ளியில் 50வது ஆண்டுவிழாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன்.ஐம்பது வருடங்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ள நமது பள்ளியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தல் ,ஒரு சிறிய இடத்தில வெறும் 20 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களுடன் தொடங்க பட்ட இந்த பள்ளி இன்று ஆயிரம் ஆயிரம் வெற்றி பெற்ற மாணவர்களை இந்த உலகுக்கு அளித்து பார்போற்றும் வண்ணம் நிமிர்ந்து நிற்கிறது நமது பள்ளி .தற்சமயம் எட்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளியாக உயர்ந்துள்ளது நம் பள்ளி

நமது பள்ளியில் பயின்று வெளி நாடுகள் ,வெளி மாநிலங்கள் ,அரசு அலுவலகங்கள் ,விஞ்ஞான கூடங்கள் ,பொறியியல் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் வேலை செய்தும் முன்னாள் மாணவர்களின் நினைவில் இப்பள்ளியின் நிழல் கொடுக்கும் மரங்கள் ,வானளாவிய உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் ,விலாசமான வகுப்பறைகள் போன்றவை நினைவில் நிற்கும் என்பதில் ஐயமில்லை

Welcome speech Essay
Welcome speech Essay

அவ்வகையில் நமது பள்ளியின் நினைவுகளுடன் வாழ்ந்து வரும் நமது பள்ளியில் பயின்று இந்திய விஞ்ஞானி யாக உயர்ந்திருக்கும் நமது சிறப்பு விருந்தினரை வரவேற்கிறேன் . நமது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி இந்திய மாணவர்கள் அனைவருக்கு ஊக்க சக்தியாக விளங்கும் இவரது இளமைக்காலம் ,நமது பள்ளியில் துவங்கியது என்பது நமக்கெல்லாம் பெருமை மிகுந்த ஒன்றாகும்.

இங்கே கூடி இருக்கு அணைத்து மாணவர்களுக்கும் தமது வாழ்வை முன்னுதாரண படுத்தி தமது உரையை வழங்குமாறு வீரவேற்கிறேன்.

ஒவ்வொரு மாணவரும் சிறந்தவர் தான் ,நன்றாக படித்தல் மட்டுமல்லாது நன்றாக விளையாடுதல் ,நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்துதல் , போன்றவையும் ஒரு பள்ளி மாணவருக்கு வழங்கும் சிறந்த பரிசாகும் ,அவ்வகையில் தான் பெற்ற அறிவை பற்றி மட்டும் விவாதிக்காமல் தனது பள்ளி தமது மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்த வழிகளையும்,சிறந்த ஆசிரியர்கள் பற்றியும் எடுத்து கூறி நமது அனைவரையும் ஆச்சர்யங்களில் மூழ்கடித்த சிறப்பு விருந்தினரது பேச்சை கேட்டதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன் ,அவரது எதிர்காலமும் நடப்பு வாழ்க்கையும் நமது பள்ளியின் நினைவுகளுடன் பூரிப்புடன் இருக்க இறைவனை பிரார்த்தித்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன்

 

Kidhours –  Welcome speech Essay , Welcome speech Essay style , Welcome speech Essay in tamil ,

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.