திண்மக்கழிவு என்றால் என்ன?
திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள்இ வைத்தியசாலைகள்இ வர்த்தக வியாபாரஇ கைத்தொழில் மற்றும் விவசாய செயற்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும் வெளியேற்றப்படுகின்ற திரவமல்லாத கழிவு திண்மக்கழிவு என வரையறுக்கப்படுகின்றது. திண்மக்கழிவானது உணவுக்கழிவுகள்இ கட்டட நிர்மாணக்கழிவுஇ தொழிற்சாலைக்கழிவுஇ கடதாசிஇ உலோகங்கள்இ பிளாஸ்டிக் கண்ணாடி முதலானவற்றையும்இ பொதி செய்வதனால் உண்டாகும் கழிவுகள் போன்ற பல்வேறுபட்ட வித்தியாசமான பொருட்களினை உள்ளடக்குகின்றது.
திண்மக்கழிவுகளானது நாட்டுக்கு நாடும்இ வீட்டுக்கு வீடும்இ தொழிற்சாலைக்கு தொழிற்சாலையும் வேறுபடுகின்றது. சிலவேளைகளில் குறிப்பிட்ட சில பொருட்கள் குறித்த நாட்டினில் அல்லது தொழிற்சாலையினால் அல்லது நபரினால் கழிவுகளாகக் கருதப்படலாம்.
எமது பிரதேசத்தில் கடதாசிஇ தேங்காய்சிரட்டைஇ பிளாஸ்ரிக் என்பனவற்றை திண்மக்கழிவுகளாக கழிக்கின்றார்கள். உண்மையில் இவை பெறுமதியுள்ள வளங்களாகும். உகந்த முகாமைத்துவத்தின் ஊடாக இப்பொருட்களிலிருந்து பல நன்மைகளினை பெற்றுக்கொள்ளலாம். எமது மாநகர சபையும் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து சேதனப் பசளைகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றோம். இப்பசளைகளை பூங்காக்கள்இ தெருக்கள்இ வீதிகள் போன்றவற்றை அழகுபடுத்துவதற்காகவும் தற்பொழுது வயல் நிலங்களுக்கூட வாங்கி பயணப்படுத்தி உச்சபயனை அடைந்திருக்கின்றார்கள்.
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றாடல் பிரச்சினைகள்:
வளி மாசடைதல்இ நீர் மாசடைதல்இ மண் மாசடைதல்இ சுகாதாரப் பிரச்சினைகள் உயிரினப் பல்லினத்துவத்தின் மீதான சேதங்கள் இயற்கை காட்சிகளின் அழிவு சமூகப் பொருளாதார பிரச்சினைகள் திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகளில் வளி மாசடைதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
பல்வேறுபட்ட நுண்ணுயிர்களால் திண்மக்கழிவுகள் பிரிந்தழிகைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இச்செயற்ப்பாடுகளின் போது காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டினால் பல்வேறுவகையான இரசாயன வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து துர்நாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவ்வாறு துர்நாற்றம் உருவாகும் காரணத்தினால் அவ்விடப்பரப்பில் வாழும் வதிவிடவாசிகளுக்கு தொல்லைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள் கழிக்கப்படும் இடங்களினைத் தெரிவு செய்தல் இலகுவான நோக்காக இருக்காது. திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பூகோள வெப்பமுறலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது.
திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளின் போது உருவாகும் தூசுகளாலும் வளி மாசடைவு ஏற்படுகின்றது. குறிப்பாக திண்மக்கழிவுகளின் காவுகையின் போதும்இ கழிவகற்றலின் போதும் தூசு துணிக்கைகள் பரம்பலடைகின்றது. இதனால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கைத்தொழில் கழிவுகள் கழிவகற்றலுக்கு அகப்படும்போது உருவாகும் தூசுகளால் தீராத சுவாச நோய்கள் உருவாக்கப்படலாம்.
திண்மக்கழிவுகள் எரிக்கப்படும்போது உருவாகும் பல இரசாயன கூறுகளானவை மனிதனுக்கு அதிகளவு தீமையை ஏற்ப்படுத்துகின்றன. திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பல சந்தர்ப்பங்களில் தீப்பற்றக்கூடியதாக இருக்கலாம். பிளாஸ்ரிக் உள்ளடங்கலாக எல்லா திண்மக்கழிவு பொருட்களும் பல நிலைகளில் எரிதலுக்கு உட்படுத்தப்படலாம். இதனால் உயர்ந்த சுற்றாடல் மாசடைதல் நிலைமைகள் உருவாக்கப்படலாம்.
நீர் மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை நீர் மாசடைதலாகும். எமது நாட்டில் உள்ள வடிகாலமைப்புத் தொகுதியானது பல வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொலித்தீன் பைகள்இ தேங்காய் மட்டைகள்இ ஏனையவை போன்றன வடிகாலமைப்பினுள் சென்று வடிகாலமைப்புத் தொகுதியைத் தடுக்கின்றன.
வடிகான்களை எவ்வளவுதான் துப்பறவு செய்தாலும் மக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில் அசமந்தமாக இருப்பது கவளையளிகின்றது. இவ்வாறு தடுக்கப்பட்டுள்ள வடிநீரானது நுளம்புகள்இ பறவைகள்இ எலிகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களுடன் தொடர்புபட்டு வாழுகின்ற ஏனைய விலங்குகளின் இனப்பெருக்க இடங்களாகச் செயற்படுகின்றன. கிணறுகளும் வடிகால்வாய் நீரும் அவற்றினுள் கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மாசுபடுகின்றன. இதனால் உயிரியல் ஒட்சிசன் தேவை இரசாயன ஒட்சிசன் தேவை மிக அதிகளவில் காணப்படுகின்றது. திரவக் கழிவுகளால் குடிநீர் தொற்றாக்கலுக்குள்ளாக்கப்படுவதன் மூலம் பல சுகாதாரப் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மேலும் தீவிரமான சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன.
சுகாதாரப்பிரச்சினைகள்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை சுகாதார ரீதியான பிரச்சினையாகும். திண்மக்கழிவுகளுடன் பல சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்புபட்டுள்ளன. திண்மக்கழிவுகளுடன் தங்களுடைய வாழ்க்கை வட்டத்தை நெருங்கிய முறையில் பேணுகின்ற ஈக்கள்இ நுளம்புகள்இ கரப்பான் பூச்சிகள்இ எலிகள் போன்றவற்றினால் வேறுபட்ட வகைக்குரிய நோய்கள் பரப்பப்படுகின்றன. அதாவது டெங்குஇ மலேரியாஇ மூளைக்காய்ச்சல்இ பைலேரியா போன்ற நோய்கள் இவ்வங்கிகளால் பரப்பப்படுகின்றன.
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல் பிரச்சினை சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகும். இந்த வகையில் வாழும் சுற்றாடல் துப்பரவற்றதாகவும்இ நிம்மதியற்றதாகவும் காணப்படுகின்றது. இதனால் நாளாந்த வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் கழிவகற்றலுக்கான செலவுஇ சுகாதார சேவைகளுக்கான செலவுகள் போன்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தோன்றுகின்றன.