குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி நவ., 19ம் தேதி, உலக குழந்தைகள் மீதான வன் கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக பெண்கள் மாநாட்டு அமைப்பு, இத்தினத்தை நடத்துகிறது.குழந்தைகளை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல்,
வார்த்கைளாலோ அல்லது உணர்வு களை பாதிக்கும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்வது அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது.இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்தபாடில்லை.
கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான், குற்றங்கள் ஒழியும். தற்போது குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால், துாக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
குழந்தை திருமணங்கள், சிசுக்கொலை, குழந்தை தொழிலாளர் முறை போன்ற குற்றங்களுக்கு பெரும்பாலும் பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர். அறியாமையும், வறுமையுமே இதற்கு காரணங்களாக உள்ளன.
தங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் நபர்களை குழந்தைகள் சரியாக அடையாளம் கண்டு கொண்டாலும், இவை பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. பயம் காரணமாக அவற்றை யாரிடமும் கூறுவதில்லை. குழந்தைகளுக்கு எது நல்ல தொடுதல், எது தவறானது என்பது குறித்து பெற்றோர் சொல்லித்தர வேண்டும்.