Sunday, January 19, 2025
Homeபெற்றோர்வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத உணவுகள் எவை என்று தெரியுமா? தவறாது தெரிந்து கொள்ளுங்கள்

வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத உணவுகள் எவை என்று தெரியுமா? தவறாது தெரிந்து கொள்ளுங்கள்

- Advertisement -
foods-you-should-avoid-on-empty-stomach-kidhours
foods-you-should-avoid-on-empty-stomach-kidhours

சாப்பிடுவது முக்கியமல்ல என்று வேலையே கண்ணாக இருப்பவரா நீங்கள்? அல்லது இஷ்டப்பட்ட நேரத்தில், தான் தோன்றித் தனமாக சாப்பிடுபவர்களா நீங்கள்? எப்படி இருந்தாலும் வெறும் வயிற்றில் சில உணவுகளை மட்டும் சாப்பிடவே கூடாது. அது என்ன என தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள்…

- Advertisement -

நம்மில் பலருக்கும் காலையில் தூங்கி முழித்ததும் டீ அல்லது காபி குடித்தாக வேண்டும். ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால் அமிலத்தன்மை அதிகமாகி செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் டீ காபியோடு குட்டி சைடீஸ் எதுவும் எடுத்துக் கொள்ளலாம்.

morning-coffee-kidhours
morning-coffee-kidhours

அதேபோல் காலையில் வெறும் வயிற்றில் உடல் பயிற்சி செய்தால் எடை ஜிவ்வென குறையும் என சிலர் நினைக்கின்றனர். இதுவும் முற்றிலும் தவறானது. இது கொழுப்பைக் குறைக்காது. மாறாக தசையையே குறைக்கும். இதேபோல் வெறும் வயிற்றில் சோடா பானத்தை தவிர்க்க வேண்டும். இவை குடல் பகுதியில் எரிச்சல், வாந்தியை ஏற்படுத்தும்.

- Advertisement -
paracitamal_tablet-kidhours
paracitamal_tablet-kidhours

இதேபோல் வெறும் வயிற்றில் பாரசிட்டமால் போன்ற தலைவலி மாத்திரைகளை எடுக்கவே கூடாது. இதனால் இவற்றின் வீரியம் அதிகமாவதோடு, அது மலத்தில் இரத்தப் போக்கையும் உருவாக்கிவிடும். அதேபோல் காலையில் கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும் .

- Advertisement -
food-breakfast-kidhours.jpg
food-breakfast-kidhours.jpg

காலையில் எழுந்ததும் சுத்தமான தண்ணீர் இரண்டு டம்ளர் எடுத்துக்கொள்ளலாம். இதனால் மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இருக்காது. வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம், சோயா சாப்பிட்டால் உடல் நல்ல பலம் பெரும். காலை எழுந்ததும் தேங்காய் பால் குடித்துவர வயிறுபுண் குணமாகும்.

The-old-rice-is-great-and-medical-kidhours
The-old-rice-is-great-and-medical-kidhours

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நீரில் ஊற வைத்த பழைய சோற்றை சாப்பிட்டால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மேலும் பழைய கஞ்சியுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டு வர சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.