மனிதனது உடலானது வியர்வை செயட்பாட்டின் மூலமாகவே உடல் வெப்ப நிலையை பேணுகின்றது.ஆனால் அதிகளவான வெப்பம் நிலவும் பொது வியர்வை செயற்படு போதுமானதல்ல அதிகளவான நீரை பருகுதல் நிலையில் ஓய்வு எடுத்தல் முதலிய முன்னெச்சரிக்கைகளை பேணாவிட்டால் உடல் வெப்ப நிலையானது ஆபத்தான நிலைக்கு கொண்டுசெல்லப்படும்
உதாரணமாக வெப்பம் சார்ந்த நோய்கள், வெப்ப வெடிப்பு, வெப்ப பிடிப்பு
,வெப்ப சோர்வு மற்றும் வெப்ப அதிர்ச்சி என்பவற்றை உள்ளாக்குகின்றது . வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று வைத்தியரின் ஆலோசனை பெற வேண்டும்.
இவ் வெப்ப அதிர்ச்சியானது மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்த கூடியது என மருத்துவர்கள் கூறுவர்.வெப்ப பாதிப்புக்களில் இருந்து எம்மை நமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அதற்க்கான பின் வரும் முன்னெச்சரிக்கைளை முன்னெடுக்க வேண்டும்.
அடிப்படையாக நாங்கள் எமது நாட்டின் வெப்பமான காலநிலை காலப்பகுதியினை இனங்கண்டு கொள்ள வேண்டும் அதாவது வருடத்தின் எந்த மாதப்பகுதியில் வெப்பமான காலம் தொடங்குகின்றது ,அதிகூடிய வெப்பமான காலம் எது ..வெப்பம் தனிக்கின்ற அல்லது குறைகின்ற காலப்பகுதி எவை என்று நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் வெப்பம் தொடங்கும் காலப்பகுதிக்கு முன்னதாகவே வெப்பத்தை தாக்குபிடிக்கக்கூடியதான உணவு பொருட்களை உற்கொள்வது எமது உடல் வெப்பத்தை தாக்குவதிக்குரிய சக்தியை பெற்றுக்கொள்வதன் மூலம் எமது உடலை பதிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ளலாம்.
எங்களுடைய வீட்டுதோட்ட்ங்களில் வெப்பத்தை குறைக்கக்கூடிய பழவகைகளை முன்னரே பயிரிட்டு அதாவது வெப்பமான காலத்தில் அறுவடை செய்யக்கூடியவரு பயிறுடல் வேண்டும் உதாரணமாக தர்பூசணி ,கேக்கறிகாய்என்பவையும் மற்றும் இளநீர் ,தோடை,தேசிக்காய் போன்ற மரங்களையும் வளர்ப்பது சாலச்சிறந்தது எனலாம்.
அத்துடன் …
1.நேரடிச்சூரிய ஒளியில் செல்வதை தவிர்த்தல்
2.அதிகமான வெப்பகாலத்தில் உடட்பயிற்சி மற்றும் உடலை வருத்தி செய்யும் செயற்பாடுகளை தவிர்த்தல் .
3.தொப்பி ,குடைகளை பயன்படுத்துதல்
4.மெல்லிய நிற அல்ல இள ஆடைகளை அணிதல்.
5.வழமையான அளவை விட அதிகமாக நீரை பருகுதல் மற்றும் நீரை எடுத்து செல்லல்.
என்பவற்றை செயட்படுத்துவதன் மூலம் வெப்ப பாதிப்புக்களை குறைக்கலாம்.
1.வெப்ப சோர்வு –
உடலில் அதிக அளவான நீரும் உப்பும் பெரும்பாலும் வியர்வையினுடாக வெளியேறுவதனால் ஏற்படும்.
வெப்ப சோர்வின் அறிகுறிகள் –
இதயத்துடிப்பு அதிகரித்தல் ,அதிகளவிலான வியர்வை வெளியேறல்,தலைச்சுற்று ,குமட்டல் மற்றும் சத்தி ,களைப்பு எரிச்சல் ,மயக்கம்,சாதாரண நாட்களை விட உடல் வெப்ப அதிகமாக காணப்படுதல்.
வெப்ப சோர்வுக்கான முதல் உதவி
குளிர்மையான மற்றும் நிழல் உள்ள இடங்களில் ஓய்வு எடுத்தல் ,வழமையை பார்க்கிலும் அதிகளவு தண்ணீர் பருகுதல் ,குளிர் நீரில் குளித்தல்,அல்லது குளிர்நீரால் ஒத்தனம் கொடுத்தல்.
2.வெப்ப அதிர்ச்சி –
வெப்ப அதிர்ச்சியானது உடல் வெப்பநிலை கட்டுப்பாடு இன்றி அதிஅக்காரிக்கும்போது ஏற்படுகின்றது இவை நிரந்தரமான உடல் இயலாமை மற்றும் திடீர் மரணத்தையும் ஏற்படுத்தும்.இது சிறுவர்கள் ,முதியவர்கள் மற்றும் திறந்த இடங்களில் வேலைபுரிபவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவோர்களையே அதிகம் தாக்குகின்றது.
வெப்ப அதிர்ச்சியின் அறிகுறிகள்
அதிகரித்தல் உடல் வெப்பநிலை ,சூடான அல்லது வறண்ட உடல் ,வியர்வை அற்றதன்மை, தலைவலி ,உடல் சுறு சுறுப்பு இன்மை மற்றும் சுய நினைவு இழத்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
வெப்ப அதிர்ச்சிக்கான முதலுதவி
உடனடியாக மருத்துவரை நாடல் வேண்டும் ,பாதிக்கப்பட்டவரை குளிர்மையான அதாவது நிழலான இடத்திற்கு கொண்டு செல்லல் மேலதிகமான மற்றும் தேவையற்ற ஆடைகளை விலக்கிக்கொள்ளல்,பாதிக்கப்பட்டவரை நீர்,ஐஸ் அல்லது பனிக்கட்டிகள் அல்லது ஈரமான துணியால் குளிர்மைக்க வேண்டும்.