வாழை
தண்டு கிழங்கு வண்டு (கொஸ்மொலிடஸ்சோர்டிஸ்)
தாக்கத்தின் தன்மை நிறையுடலி தண்டுக்கிழங்கில் முட்டை இடுவதோடு அதிலிருந்து வெளியேறும் நிறையுடலிகளும் வலையின் தண்டுக் கிழங்கில் உணவை பெறுவதோடு அதில் துளைகளையும் அமைக்கும். தாவரச்சாறு கடத்தப்படுவது தடுக்கப்படுவதன் விளைவாக இலைகள் வாடி,அவை முதிர்ச்சி அடைய முன்னரே இறந்து விடும்.தாவரங்களில் சிறிய குலைகளும்,
அதில் சிறிய காய்களும் உருவாகும்.
முகாமைத்துவம்
அறுவடை செய்த பின்னர் போலி தண்டுகளை அழித்துவிடவும். இதற்க்கு அவற்றை வெட்டிகாய விடவும். தொற்றல் ஏற்பட்ட பிரதேசங்களில் வாழையை மீளநடுவதற்கு முன்னர், சிறிது காலம் ஓய்வாகவிடவும்.ஆரோக்கியமான நடுகை பொருட்களை பயன்படுத்தவும்.சாம்பல்,சாணம்பூச்சிநாசினி,நீர் என்பன கலந்த கலவையில் வாழை தண்டுகளை அமிழ்த்தியெடுத்து, பரிகரித்த பின்னர் நடுகை செய்யவும். இரசாயனக் கட்டுப்பாடிற்கு பொறிகளை தயாரிக்க 6-10 சதம மீற்றர் வட்ட வடிவான துண்டுகளை அறுவடை செய்த வாழையிலிருந்து வெட்டிஎடுக்கவும். 6 கிராம் கபோபிரானை இவ்வாறான இரண்டு துண்டுகளுக்கிடையே வைத்து பொறிகளைத் தயாரிக்கவும். ஒரு ஏக்கருக்கு இவ்வாறான 25 பொறிகள் போதுமானதாகும் ஒவ்வொரு மாதமும் இப்பொறிகளை புதுப்பிக்கவும்.
அன்னாசி
வெண்மூட்டுப்பூச்சி (டைஸ்மிகோக்கஸ்பிரேவைப்ஸ்)
தாக்கத்தின் தன்மை
தாவரங்களின் அடியிலும், பழங்களின் காம்புகளிலும் கூட்டமாக வெண் மூட்டு பூச்சிகள் வாழும் இது அன்னாசி வாடல் வைரசுவின் காவியாக தொழிற்படும். இதன் விளைவாக இலைகள் செந்நிறமாக மாறுவதோடு,தொற்றல் மிகவும் மோசமானதாக காணப்படும் போது இலைகள் மேற்பக்கமாக சுருளும் எறும்புகள் வெண் மூட்டு பூச்சிகளின் கூடங்களைபாதுகாப்பதோடு,அவற்றின் பரவளிற்கும் உதவும்.
முகாமைத்துவம்
நடுவதற்கு ஓர் நாளுக்கு முன் நடுகை பொருட்களை பீடை நாசினி கலவையில் (அசர்றமிபிரிட 20% எஸ்பீ,ப்ரொபேணப்ஸ் 500 கி/லீ ஈசி,ப்ரொத்தி ஜொப்ஸ் 500 கி/லீ ஈசி,அல்லது கார்போசல்பன் 200 கி/லீஈசி) ஐந்து நிமிடங்களிற்கு அமிழ்த்தி பரிகரித்து,உலர்த்தவும். உச்சி அழுகு வதைதடுப்பதற்கு மேற்றலாக்சில் 8% ஐயும், மங்கோசெப் 64% ஐயும் பூச்சி நாசினிகளுடன் கலவை செயவும்.வெண் மூட்டுபூச்சிகளை ஒட்டுன்னிகளிடமிருந்தும், ஊண் சூரையாடிகளிடமிருந்தும் பாதுகாக்கும் எறும்புகளை கட்டுப்படுத்தவும். ஏற்கனவே தொற்றல் ஏற்பட்ட தோட்டத்தை பிரட்டி,அனைத்து பயிர் மீதிகளையும் அகற்றி,எரித்துவிடவும்.ஏனெனில் தோட்ட்த்தில் மீதியாக காணப்படும் பயிர் மீதிகளும்,களைகளின் வேர்களும் வெண் மூட்டுப்பூச்சிகளுக்கு அடைக்கலம் வழங்கலாம். தோட்டத்தில் இப்பீடையின் தொற்றலை அவதானித்தல்,நடுகைபொருட்களை பரிகரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஏதாவதொரு பூச்சிநாசினியை விசிறவும்.தாவரத்தின் அடி பகுதியை நனைப்பதற்கு பூச்சிநாசினியை விசிறவும்.
மாதுளை
இலைகளை துளைக்கும் மயிர்கொட்டிப் புழு (டியூடோரிஸ்ஐஸோகிரேட்ஸ் )
தாக்கத்தின் தன்மை
நீல நிறமான வண்ணத்து பூச்சிகள் இலைகள்,பூக்கள், சிறிய முட்டைகளின் மீது முட்டையிடும். முட்டையிலிருந்து வெளியேறும் குடம்பிகள் காய்களை துளைத்து நீர் தன்மையான பாகங்களையும், விதைகளையும் உணவாககொள்ளும். பூச்சியின் சேதத்தை அடுத்து பக்க்ரீரியாக்க்கள்,பங்கசுக்களின் துணைத் தொற்றல்கள் ஏற்படும்.
முகாமைத்துவம்
கடதாசிகள் அல்லது துணிப்பைகளை பயன்படுத்தி காய்கள் இளமையாக உள்ளபோதே அவற்றிற்கு உறையிடவும்.
பப்பாசி
செதிற்பூச்சி (ஆஸ்ப்பிடியொடஸ்டிஸ்ட்ரக்டர் )
தாக்கத்தின் தன்மை
வட்ட வடிவான கபில நிறமான செதிற்பூச்சிகளின் குடித்தொகைகள் பழங்களின் மீது காணப்படலாம்.சாற்றை உறிஞ்சிகுடிப்பதனால் பழங்களின் தோளில் மஞ்சள் நிறமான புள்ளிகளை காணலாம்.
முகாமைத்துவம்
பொருளாதார சேதம் அரிதாகவே ஏற்படும்.கொக்சினொலிடோ இத்தொகையை பொருளாதார சேதமட்டத்திற்கு கீழே வைத்திருக்கும்.
மா மற்றும் பலா (பக்ரோசீராஇனம்)
தாக்கத்தின்தன்மை
இதன்நிறையுடலிவயிற்றில் புள்ளிகளை கொண்ட கபில நிறமான ஈ ஆகும். முட்டடையிடுவதற்கு சூலிடப்படுத்தியால் துளை இடுவதோடு,அதனை தொடர்ந்து குடம்பிகள் விருத்தியடைவதால் காய்களிற்கு சேதம் ஏற்படும். குடம்பிகள் உணவை உண்பதன் விளைவாக காய்கள் விகாரமடைதல்,இளம்காய்கள் உதிர்ந்து விழுதல் என்பன ஏற்படும்.
முகாமைத்துவம்
விருத்தியடையும் குடம்பிகளை அழிப்பதற்காக மரத்தின் கீழே உதிர்ந்து விழுந்துள்ள காய்களை சேகரித்துஅழிக்கவும். ஆன்நிறையுடலி பூக்களை கவர்ந்து அழிப்பதற்காக மீதைல் யுஜினோல் பொறிகளை(ஒருஏக்கரிற்கு 8-10 பொறிகள்) வருடம் முழுவதும் பயன்படும். காய்களிற்கு உறையிடுவதற்கு கடதாசிபைகள் அல்லது பொலிதீனை பயன்படுத்தவும்.சிபாரிசு செய்யப்படட பூச்சி நாசினியை (பேந்தியன் 500கி/லீஈசி)பயன்படுத்தவும். ஒவ்வொரு லீட்டர் பூச்சி நாசினிக்கும் 25 கிராம் சீனையை சேர்கவும்.பாலியல் ரீதியாக முதிர்ச்சி அடையாத பெண் ஈக்களை கவர்வதற்கு புரத இறை பொறிகளை பயன்படுத்தவும். ஒரு பூச்சி நாசினியுடன் (ஸ்பினொசாட்)கலக்கப்பட்ட புரத இறை பொறியை அடிப்பகுதியிலுள்ள கிளைகளின் இலைகளிற்கு கீழ்ப்பக்கமாக விசிறவும்.இதனை இரண்டு வாரங்களிற்கு ஒரு தடவை விசிறவும்.