Saturday, March 1, 2025
Homeபெற்றோர்வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கணுமா? வெங்காய டீ மட்டும் போதுமே

வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கணுமா? வெங்காய டீ மட்டும் போதுமே

- Advertisement -

 

- Advertisement -
onion-tea-for-health-kidhours
onion-tea-for-health-kidhours

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது.

- Advertisement -

வெங்காயத்தை நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது, நம் உடலின் வெப்பநிலை சமநிலையில் இருக்கும். நாம் உண்ணும் கடினமான உணவு கூட எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதைப்போல தான் வெங்காயத்தை டீயாகவும் எடுத்து கொள்வதும் சிறந்தது.

அந்தவகையில் தற்போது வெங்காயத்தை டீயை எப்படி தயாரிக்கலாம் எனவும் இது எடுத்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருள்கள்
  • வெங்காயம் – 1
  • எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  • க்ரீன் டீ இலைகள் அல்லது பேக்
தயாரிப்பது எப்படி

முதலில் வெங்காயத்தை தோலுரித்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

வெங்காயத்தின் சாறு தண்ணீர் இறங்கி, நீரின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறும் க்ரீன் டீயும் சேர்த்து விட்டு அப்படியே 2 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

பின்னர் அதை வடிகட்டினால் வெங்காய டீ தயார். தேவைப்பட்டால் இனிப்புக்காக சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

வேறு நன்மைகள் என்ன?
  • வெங்காய டீயை இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தும். அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.
  • மூச்சுக்குழல் அழற்சி, தொண்டைப்புண், தொண்டை அழற்சி, சுவாசக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் வெங்காய டீயை தொடர்ந்து குடித்து வரலாம்.
  • வயிறு மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பு மற்றும் தொப்பையை வெங்காய டீ வேகமாகக் குறைக்கும். உடலில் மெட்டபாலிசத்தைத் துரிதப்படுத்தும்.
  • வெங்காயத்தில் குவெர்ட்டின் என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பதால், இது புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.