Sunday, January 19, 2025
Homeஅனர்த்தங்கள்இயற்கை அனர்த்தம்வறட்சியின் பொதுவான தன்மைகள்

வறட்சியின் பொதுவான தன்மைகள்

- Advertisement -

வறட்சி​,varatchi,drought

- Advertisement -

வறட்சி என்பது காலநிலையில் மீண்டு வரும் ஒரு பண்பாகும். இது உலகில் அதிகளவிலும், குறைந்தளவிலும் மழை பெய்யும் அனைத்து காலநிலை வலையங்களிலும் நடைமுறையில் தோன்றும் ஒரு தோற்றப்பாடாகும். இது காலநிலையின் தற்கலிகமானதொரு மாற்றம் ஆகும்.இதற்கு மறுதலையாக வறண்ட நிலை என்பது காலநிலையின்

நிரந்தரமானதொரு பண்பாகும்.இது குறைந்தளவில் மழை பெய்யும் இடங்களிற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். வறட்சி என்பது நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சியின் அளவு இயற்கையாக குறைவதனால் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். வழமையாக இது உயர்ந்தளவான வெப்பநிலை, ஒப்பீட்டளவில் வேகமாக வீசும் காற்று, குறைந்தளவான சரீரப்பதன் என்பவற்றுடன் இணைந்துள்ளது.

- Advertisement -

உண்மையான ஆவியுயிர்ப்பிற்கும், சாத்தியமான ஆவியுயிர்ப்பிற்கும் இடையிலான விகிதம் ஒன்றை விடக் குறையும் போது வறட்சி அல்லது பயிர் நீர் தகைப்பு காணப்படும்.ஏனைய இயற்கை அனர்த்தங்களுடன் வறட்சி பல்வேறு வழிகளில் வேறுபட்டுள்ளது. முதலாவதாக வறட்சியின் பாதிப்புக்கள் மெதுவாக குறிப்பிடத்தக்கதொரு காலத்திற்கு ஒன்றுசேர்வதோடு, நிகழ்வு இடம் பெற்று பல பருவங்கள் அல்லது வருடங்கள் காலத் தாழ்த்தியும் தாக்கம் காணப்படலாம். மேலும் வறட்சியின் ஆரம்பத்தையோ அல்லது முடிவையோ தீர்மானிப்பது கடினமானதாகும். இக்காரணிகளினால் வறட்சி பொதுவாக மிக மெதுவான ஒரு தோற்றப்பாடாகக் கருதப்படுகின்றது.

- Advertisement -

இரண்டாவதாக, வறட்சிக்கு துல்லியமான, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணம் இன்மையால் உண்மையில் வறட்சி நிலவுகின்றதா என்பதிலும், அவ்வாறு வறட்சி நிலவுகின்றதாயின் அதன் தீவிரத்தன்மையைத் தீர்மானிப்பதிலும் ஒரு தடுமாற்றம் நிலவுகின்றது. யதார்த்தத்தில் வறட்சிக்கான வரைவிலக்கணம் பிராந்தியம், பயன்பாடு (அல்லது தாக்கம்) அன்பவற்றிற்க்கு அமைய வேறுபடும். நிலவும் வறட்சிக்கு மதிப்பெண் வழங்கப்படுவது இதன் காரணத்தினாலேயே ஆகும்.

மூன்றாவதாக வெள்ளம், மண் சரிவுகள், சூறாவளி ஏனைய பெரும்பலான இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றுடன் ஒப்பிடும் போது வறட்சியின் தாக்கம் கட்டமைப்பற்றதாகும்.ஏனைய இயற்கை அனர்த்தங்களை விட வறட்சியின் தாக்கங்கள் பரவலாக ஒரு புவியியற்பிரதேசத்திற்கு பரந்து காணப்படும். இக்காரணிகளிற்காக பதிப்பிற்கான அளவீடும், அனர்த்தத்திற்கான வறட்சி நிவாரணம் என்பவற்றை வழங்குவது ஏனைய இயற்கை அனர்த்தங்களை விட மிகவும் கடினமானதாகும்.

இது ஒரு இயற்கை நிகழ்வாயினும் கூட, யதார்த்தத்தில் எந்தவொரு பிராந்தியத்திற்கும் அப்பிராந்தியம் அந்நிகழ்விற்கு வெளிக்காட்டப்படும் அளவினதும் (அதாவது பல்வேறு தீவிர மட்டங்களில் ஏற்படுவதற்கான நிகழ்தகவாகும் அந்நிகழ்வாள் சமூகம் பாதிக்கப்படக்கூடிய தன்மை என்பவற்றின் விளைவாகும்.

வறட்சியில் இருந்து தப்புவதற்காண தந்திரோபாயங்கள்
ஒரு முன் தேவையாக,செங்கபில மண்ணில் சரியான மண் ஈரப்பதனில்  நேரகாலத்துடன் நிலத்தைப் பண்படுத்துவது அவசியமானதாகும். புந்தி நிலத்தை ஆயத்தம் செய்யும் போது இப்பயிர் பிந்தியே ஸ்தாபிக்கப்படும். இது அறுவடைசெய்யும் போது மழைப்பெய்தல்,பூக்கும் போது நீரிற்கு பற்றாக்குறைவு ஏற்படல் அல்லது நோய் பீடைகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற சாதக மற்ற பருவகாலதாக்கங்களிற்கு வழிவகுக்கும். நிலத்தை பண்படுத்தும் வரை விவசாயிகாத்திருக்க வேண்டியுள்ளதால் அவர் பூச்சிய நிலப் பண்படுத்தல் அல்லது குறைந்த நிலப் பண்படுத்தலை மேற்கொள்ளமுடியும். இது நிலத்தைப் பண்படுத்த அதிகளவில் மழை வீழ்ச்சியில் தங்கியிருக்கவேண்டிய நிலையை தவிர்க்கும். நிலத்தை சுத்தம் செய்வதற்கான இன்னொரு மாற்றுத் தீர்வுசர்வகளை நாசினியொன்றை விசுருவதாகும். இதனால் குறுகிய காலத்தில் அனைத்துக்களைகளையும் அழிக்கும். எனவே மழைப்பெய்ய தொடங்கும் போதே விதைகளை நடுகை செய்யமுடியும்.
பயிர்களை செய்கை பண்ணும் போது உலர் காலத்தை தவிர்த்துக் கொள்ள நடுகை செய்யும் காலம் மிகவும் முக்கியமானதாகும். உதாரணமாக மிளகாய் இலைச்சுருளல் சிக்கலையும்,வெங்கயத்தில் பனிப்பூச்சியையும் கட்டுப்படுத்துவதற்கு சிறுப்போகத்தில் முன்னரே நடுகை செய்தல் வேண்டும். (மிளகாய் ஏப்ரல் ஆரம்பத்திலும்,வெங்காயத்தைமே ஆரம்பத்திலும் நடல் வேண்டும்). அவரைப்பயிர்களையும் விசேடமாக சிறுபோகத்தில் பிந்தி நடும் போது வைரசுகளினால் அதிகளவில் பாதிக்கப்படும்.
ஏதிர்பராது பெய்யும் மழையை நெற்செய்கைக்கு உச்ச அளவில் பயன்படுத்தப்படும். அதேவேளை பயிர்ச்செய்கைப் பருவத்தின் முடிவில் நீர் பற்றாக்குறைவின் காரணமாக பயிர்கள் அழிவடைவதையும் குறைப்பதற்காகவே வலகம்பாஹீவ எண்ணக்கரு விருத்தி செய்யப்பட்டது. இதன் பின்னணியிலுள்ளதத்துவம் யாதெனில் நெற் செய்கைக்கு வயற் செயற்பாடுகளை முன்னரே ஆரம்பிப்பதன் ஊடாக எதிர்பாராதுபெய்யம் மழையை காலப்போகப் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதன் முலம் தொடர்ந்து வரும் சிறுபோகத்தின் போது நெற்செய்கைக்கு அல்லது மறு வயற்பயிர்களைச் செய்கைப்பண்ணுவதற்கு நீரை சேமிப்பதாகும்.
பாதகமான ஈரப்பதன் அல்லது வெப்ப நிலைமைகளை சகித்துவரும் வல்லமை கொண்ட உள்ளுரில் வெளியிடப்பட்ட மறுவயற் பயிர் வர்க்கங்கள் உள்ளன. எனினும் வரட்சியான நிலமையிலிருந்துதப்பவதற்கு ஒரு பெரிமுறையாக குறுகிய கால வயதுடையவர்க்கங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இவற்றிட்கு உதாரணமாக சோளவர்க்கமான அருண(90 நாட்கள்,உழுந்து வர்க்கமான அநுராத (65-75 நாட்கள்), பாசிப்பயறுவர்க்கமான எம்.ஐ5(55-60 நாட்கள்) சோயா அவரைவர்க்கமான பீ.பி1 (80-85 நாட்கள்),நிலக்கடலைவர்க்கமான திஸ்ஸ (90நாட்கள்)இமரக்கறி கௌப்பி (45 நாட்கள்) என்பவற்றை குறிப்பிடமுடியும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.