Wednesday, January 22, 2025
Homeகல்விபயன் தரும் தாவரங்களும் பயன் பெறும் விலங்குகளும்.... Useful plants & useful animals...

பயன் தரும் தாவரங்களும் பயன் பெறும் விலங்குகளும்…. Useful plants & useful animals ….

- Advertisement -
useful-pants-songs-kidhours
useful-pants-songs-kidhours

பயன் தரும் தாவரங்களும் பயன் பெறும் விங்குகளும்

மரங்கள் செடிகள் கொடிகளுமே
மண்ணில் வளர்ந்த தாவரமே..
அதுவே எல்லா விலங்குக்கும்
உணவாய் மாறி விடுகிறதே

- Advertisement -

விலங்குகளின் நோய்களுக்கு
மருந்துப்பொருள் ஆகிடுதே
வெப்பத்தினை தணித்துமே
நிழலாய் என்றும் பயன் கொடுக்கும்

விலங்குகள் வாழ்வதற்கு
உறைவிடத்தைக் கொடுத்திடுமே
பெரிய தாவரம் சரிந்து விட்டால்
விலங்குகளும் சிக்கிவிடும்

- Advertisement -

கோடைகாலம் ஆகிவிட்டால்
கொடிகள் செடிகள் காய்ந்து விடும்
மரத்தின் இலைகள் விழுந்துவிட்டால்
உணவின்றி சோர்ந்துவிடும்

- Advertisement -

மண்ணின் மைந்தர் தாவரமே
விலங்குகளின் கழிவுகளை
உணவாய் உண்டு வளருமே
உலகில் என்றும் உயருமே

விலங்குகள் இறந்துவிட்டால்
மண்ணில் அதை புதைத்திடுவார்
தாவரங்களின் செழிப்புக்கு
விலங்குகள் பயன் கொடுக்கும்

பயன்கள் தரும் தாவரத்தை
விலங்குகள் அழிப்பதனால்
சுற்றுப்புறம் எல்லாமே
அழகின்றி போய்விடுமே

தாவரங்கள் வளர்த்து நாங்கள்
நல்ல பயன் பெற்றிடுவோம்
விலங்குகளின் வளர்ச்சியை
என்றும்காத்து நின்றிடுவோம்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.