அமெரிக்காவில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு சாதனம் மார்ஸ்கேட் என்ற ரோபோ. செல்லப்பிராணி பிரியர்களுக்காக இதை தயாரித்திருக்கிறது எலிபண்ட் ரோபோடிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். நீங்கள் எந்தவிதமான ஆர்டரும் கொடுக்கத் தேவையில்லை. மார்ஸ்கேட் தனித்து இயங்கும் ஆற்றல் வாய்ந்தது.
உங்களின் குரலுக்கும் தொடுதலுக்கும் பதிலுணர்வு அளிக்கும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள பொம்மை களுடன் விளையாடி உங்களைக் குஷிப் படுத்தும். இதன் கால்கள், நகம், தலை எல்லாம் கலாபூர்வாக ஒரு பூனையைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடை கூட அசல் பூனையைப் போல இருக்கிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.இனி மேற் கத்திய நாடுகளின் பல வீடுகளில் செல்லப்பிராணியாகப்போகிறது மார்ஸ்கேட்.