Today Tamil News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
திருடப்பட்ட மனித எச்சங்களை பேஸ்புக்கில் விற்க முயன்ற பென்சில்வேனியாவின் (Pennsylvania) ஜெர்மி லீ பாலியை(40) (Jeremy Pauley ) பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.
பென்சில்வேனியாவின் ஈனோலாவைச் சேர்ந்த 40 வயதான ஜெர்மி லீ பாலி (Jeremy Pauley ) ஃபேஸ்புக்கில் மறுவிற்பனை செய்வதற்காக திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிட்டில் ராக்கில் உள்ள மருத்துவ அறிவியலுக்கான ஆர்கன்சாஸ் பல்கலைகழகத்தின் மார்ச்சரி சர்வீசஸ்ஸில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட பெண்ணின் உடல் சவக்கிடங்கு ஊழியர்களால் திருடப்பட்டு விற்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 வயதுடைய ஜெர்மி லீ பாலி (Jeremy Pauley ) இவ்வாறு திருடப்பட்ட உடல் உறுப்புகளை சந்தைப்படுத்த “The Grand Wunderkammer” என்ற பேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும் திருடப்பட்ட மனித எச்சங்களை வாங்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் குழந்தையின் உடல் பாகங்கள் உட்பட மூன்று ஐந்து-கேலன் வாளிகள் அடங்கிய மனித உடல் உறுப்பு அடங்கிய பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஜெர்மி லீ பாலியின் (Jeremy Pauley ) வாக்குமூலத்தின்படி, உடல் உறுப்புகளை மறுவிற்பனை செய்ய எண்ணியதாக பாலி விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஆர்கன்சாஸ் மார்ச்சரி சர்வீசஸ்ஸில் இருந்து திருடப்பட்ட பெண்ணுக்கு உடல் உறுப்புகளுக்கு $4,000 கொடுக்க பாலின் ஏற்பாடு செய்ததாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் வியாழன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பாலின் (Jeremy Pauley ), நீதிமன்ற பதிவுகளின்படி பவுலி $50,000 பத்திரத்தில் விடுவிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
kidhours – Today Tamil News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.