Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
Vance Brand விமான நிலையத்துக்கு அருகில் மோதிக்கொண்ட இரண்டு சிறிய விமானங்களும் வெவ்வேறு இடங்களில் விழுந்து நொறுங்கின.அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது ஒரு விமானத்தில் இருந்த இருவரும் இன்னொரு விமானத்தில் இருந்த விமானியும் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ச்விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
kidhours – Today Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.