Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தாய்லாந்து நாட்டில் தெற்கு மாகாணங்களான பட்டாணி, யால, நாராதிவாட் மற்றும் சோங்க்லா பகுதியில் திடீரென நள்ளிரவில் 17 இடங்களில் வெடிகுண்டு மற்றும் தீ வைப்பு தாக்குதல் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் கடைகள் மற்றும் காஸ் ஸ்டேஷன் இடங்களில் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 7 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்று தாய்லாந்து நாட்டு போலீஸ் மற்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் தாய்லாந்து அரசு தாக்குதல் குறித்து விசாரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் 2004இல் இருந்து பல தாக்குதல் நடந்துள்ளது. தெற்கு தாய்லாந்து பகுதி மாகாணங்கள் மலேசியா எல்லையை ஒட்டியுள்ளது.
இந்த பகுதியில் உள்ள முஸ்லீம் மாகாணங்களான பட்டாணி, யால, நாராதிவாட் மற்றும் சோங்க்லா பகுதியில் உள்ள சில குழுக்கள் விடுதலை வேண்டி தாய்லாந்து அரசை எதிர்த்து அவ்வப்போது சிறிய தாக்குதல்கள் நடத்துவர்.
அப்படி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 7300 பேர் இறந்துள்ளனர் என்று டீப் சவுத் வாட்ச் குழு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Today Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.