Today Tamil Kids News Tech சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நெட்வொர்க் இல்லாத நேரங்களிலும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன, அதனை பற்றிய விபரங்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
நெட்வொர்க் இல்லை என்றால் மொபைலில் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக பிறரை அழைக்க முடியாது. இணையத்தையும் பயன்படுத்த முடியாது. மழைக்காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மலைப் பிரதேசங்கள், கிராமப்புறங்களில் இதுபோன்ற நெட்வொர்க் பிரச்சனை அடிக்கடி வரும்.

இதுபோன்ற சமயங்களில் நீங்கள் பிறரை அழைக்க வேண்டி இருந்தால் அதற்கு சூப்பரான வழி இருக்கிறது. இதன் வழிமுறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் பிறரை அழைக்க முடியும்.
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் இருக்கிறது. மொபைல் நெட்வொர்க் இல்லாவிட்டாலும் வைஃபை அழைப்பு அம்சத்தின் உதவியுடன் யாரையும் எளிதாக அழைக்கலாம். இந்த அம்சத்தை உங்கள் மொபைலில் செயல்படுத்தி, நெட்வொர்க் இல்லாத சூழலில் பிறரை நீங்கள் அழைக்கலாம்.
நீங்கள் எந்த மூலையிலிருந்தாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். ஆனால் இதற்கு உங்களுக்கு வைஃபை நெட்வொர்க் வேண்டும்.
ஆண்ட்ராய்டு யூசர்கள்-நெட்வொர்க் இல்லை என்றால் ஆண்ட்ராய்டு பயனர்கள் கவலைப்பட தேவையில்லை. முதலில் உங்கள் தொலைபேசி செட்டிங்குகளுக்குச் செல்லவும். ஃபோன் அமைப்புகளில் சிம் & நெட்வொர்க் விருப்பம் இருக்கும். இதிலிருந்து சிம் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதை கிளிக் செய்வதன் மூலம் வைஃபை அழைப்பு விருப்பத்தைக் காண்பீர்கள்.
இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், நெட்வொர்க் இல்லாமல் தொலைபேசியை இணைக்க முடியும்.
ஐபோன் யூசர்கள்-ஆண்ட்ராய்டு பயனர்களைப் போலவே, ஐபோன் யூசர்களும் எந்த நெட்வொர்க்கும் இல்லாமல் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்யலாம். ஐபோன் யூசர்கள் செட்டிங்ஸ் ஆப்சனை தேர்ந்தெடுத்து வைஃபை அழைப்பு ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதனை நீங்கள் ஆன் செய்த பிறகு வைஃபை மூலம் நீங்கள் பிறரை அழைக்கலாம்.
kidhours – Today Tamil Kids News Tech சிறுவர்களுக்கான உலக செய்திகள்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.