Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்சவப்பெட்டிகளை மலைகளில் தொங்கவிடும் வினோதம் Today Tamil Kids News # World Best Tamil

சவப்பெட்டிகளை மலைகளில் தொங்கவிடும் வினோதம் Today Tamil Kids News # World Best Tamil

- Advertisement -

Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழங்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல் வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் சுமார் 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். சவப்பெட்டியில் உள்ள உடல் அழுகாமல் இருக்க, மூலிகைகளால் நிறப்பப்படுகிறது.

- Advertisement -

மேலும், சில மூலிகைகளின் புகையையும் காண்பித்து இறுக ஆணி அடித்துவிடுகிறார்கள்.

 

Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

அதன் பிறகு அந்தச் சவப்பெட்டியை அங்கு இருக்கும் ஒரு மலையின் உச்சிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்தவாறே இறந்தவரின் பெயரை மூன்று முறை சப்தமிட்டுக் கூறுகிறார்கள்.

அதன் பிறகு அந்த சவபெட்டியை கயிற்றில் கட்டி அந்த மலையில் தொங்கவிடுகிறார்கள். இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் “இறந்தவர் உடலைப் பாதுகாக்கவே இப்படிச் செய்கிறோம்.

அவரின் உடல் இருந்தால்தான் அவர் சுவனம் செல்ல முடியும். மேலும், அவரின் பெயரை மூன்று முறை சப்தமிட்டுக் கூறினால்தான், இதற்கு முன் இறந்தவர்கள், புதிதாக இறந்தவரை வரவேற்க வசதியாக இருக்கும்.

இந்த வழக்கத்தை 2,000 வருடங்களாகத் தொடர்கிறோம். ஒருவேளை சவப்பெட்டியிலிருந்த உடல் அழுகிவிட்டதை அறிந்தால் அந்த சவப்பெட்டியில் மட்டும் மூலிகை ரசாயனத்தைச் சொட்டவிடுவோம்.

ஒரு முறை மூடிய சவபெட்டியில் மீண்டும் இரசாயனம் விடக் கூடாது. அது கடவுள் குற்றமாகிவிடும். ஆனாலும், இறந்தவர் சுவனம் செல்ல இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம்.

இந்தச் சூழல் எப்போதாவதுதான் ஏற்படும்” எனத் தெரிவித்திருக்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பழங்குடி மக்களின் சவப்பெட்டி இருக்கும் இடம் சுற்றுலாத்தலமாக பிரபலமாகிவிட்டது.

அதனால், தொங்கும் சவப்பெட்டிகளை பார்க்க நிறைய சுற்றுலாப்பயணிகள் வருவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

 

kidhours – Today Tamil Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.