Today Tamil Kids News NASA சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சந்திரமண்டல ஆய்வுப் பயணத்துக்காக புதிதாக தயாரிக்கப்பட்ட பாரிய ரொக்கெட்டை நேற்று விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா நிறுவனம் கைவிட்டது.
100 மீற்றர் நீளமான இந்த ரொக்கெட் முதல் தடவையாக கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து சந்திரனை நோக்கி, உள்ளூர் நேரப்படி திங்கள் காலை ஏவப்படவிருந்தது.
எனினும், இந்த ரொக்கெட்டின் என்ஜினை உரிய வெப்பநிலைக்கு குளிர்விப்பதற்கு கட்டுப்பாட்டாளர்கள் சிரமப்பட்டனர்.
அதையடுத்து, இந்த ரொக்கெட்டை ஏவும் திட்டத்தை நாசா நிறுவனம் கைவிட்டது. ஸ்பேஸ் லோன்ஞ் சிஸ்டம் (எஸ்.எல்.எஸ்.) ஆர்டேமிஸ்1 (Space Launch System (SLS) Artemis 1 ) எனும் இந்த ரொக்கெட்டின் அடிப்பகுதியில் 4 என்ஜின்கள் உள்ளன. அவற்றில் ஒன்று முறையாக குளிர்ச்சியடையவில்லை எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Today Tamil Kids News NASA
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.