Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அடால்ப் ஹிட்லருக்கு (Adolf Hitler) சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் (Adolf Hitler) இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.
இந்த “தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும்.

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று திகதிகள் உள்ளன. ஹிட்லருடைய (Adolf Hitler) பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள் ஆகியவையே அவை என கூறப்படுகின்றது.
கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் (Adolf Hitler) தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
kidhours – Today Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.