Today Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரெஞ்சு ஸ்பைடர் மேன் என அழைக்கப்பட்டும், வானளாவிய கட்டிடங்களில் ஏறி சாதனை படைக்கும் Alain Robert என்பவர் நேற்று சனிக்கிழமை La Défense பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏறியுள்ளார்.

தனது 60 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் முகமாக இங்குள்ள Total Energies கட்டிடத்தில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெற்றுக்கைகளால் ஏறியுள்ளார்.
48 அடுக்கு மாடிகள் கொண்ட குறித்த கட்டிடத்தில் இவர் ஏறுவது இது இரண்டாவது தடவையாகும்.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டிலும் இவர் இதே கட்டிடத்தில் ஏறியிருந்தார்.
“நான் மக்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சாதிப்பதற்கு 60 வயதென்பது ஒரு தடையில்லை!” என அவர் தெரிவித்தார்.
kidhours – Today Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.