Today Tamil Kids சிறுவர் சுகாதாரம்
உங்கள் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு பொருள் அதிகமாக இருக்கும்போது, உங்களது கொலஸ்ட்ரால் லெவல் அதிகமாக இருக்கும். ஆரோக்கிய செல்களை உருவாக்க நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை என்றாலும் கொலஸ்ட்ரால் அதிக அளவு கொலஸ்ட்ரால் இதய நோய் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாதது, அதிக எடை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிக்கிறது. மரபணு ரீதியாகவும் இது ஏற்படலாம். கொலஸ்ட்ரால் லெவல் அதிகமாக இருப்பது பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஆனால் வெளிப்படை அறிகுறிகள் இல்லாமல் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே இது ஒரு கண்ணுக்குத் தெரியாத கொலையாளி என்று குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும் தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலின் சில பகுதிகளில் தசைப்பிடிப்பு அல்லது வலி ஏற்படலாம். இது பெரிஃபெரல் ஆர்டெரி நோயின் (peripheral artery disease) அறிகுறியாக இருக்கலாம், இது கொலஸ்ட்ரால் தொடர்பான சுகாதார சிக்கல்.
பெரிஃபெரல் ஆர்டெரி நோய் அதாவது புற தமனி நோய் என்றால் என்ன.?
புற தமனி நோய் என்பது நம் தலை, உறுப்புகள் மற்றும் கை கால்களுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் தமனிகளில் கொலஸ்ட்ரால் போன்ற plaque உருவாகும் ஒரு நோயாகும். இந்த நிலையின் போது ரத்தத்தை எடுத்து செல்லும் தமனிகள் குறுகி, கால்கள் அல்லது கைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கின்றன. அதாவது பொதுவாக இந்த நிலையில் கை மற்றும் கால்கள் தேவைக்கு ஏற்ப போதுமான ரத்த ஓட்டத்தை பெறாது. முதுமை, நீரிழிவு மற்றும் புகை பழக்கம் ஆகியவை PAD-க்கான பொதுவான ஆபத்து காரணிகள்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் பிரான்சிஸ்கோவின் அறுவை சிகிச்சை துறையின் கூற்றுப்படி கால்கள், பிட்டம் (பட்டக்ஸ்), தொடைகள், பாதங்களில் தசைபிடிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்த பிடிப்புகள் தேவையான ஓய்வுக்குப் பிறகு படிப்படியாக குறையலாம். PAD-ன் மற்ற அறிகுறிகளில், கால்கள் அல்லது பாதங்களில் பல்ஸ் இல்லாத பலவீனமானவை அடங்கும். தவிர கால் விரல்கள், பாதங்கள் அல்லது கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது காயங்கள் மெதுவாக குணமாகும்.
PAD-ஆல் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோல் வெளிர் அல்லது நீல நிறத்திற்கு மாறலாம். மற்ற காலுடன் ஒப்பிடும் போது ஒரு காலில் குறைந்த வெப்பநிலையை அவர்கள் உணரலாம். தவிர கால்விரல்களில் நக வளர்ச்சி மற்றும் முடி வளர்ச்சி குறைவதையும் பாதிக்கப்பட்டவர் அனுபவிக்கலாம். PAD-க்கு இவ்வளவு அறிகுறிகள் இருந்த போதும் பலர் நோயின் அறிகுறிகளை கொண்டிருக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர் நிபுணர்கள். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்க நேரிட்டால் குறிப்பாக தொடர்ச்சியான வலியை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது, குறைந்த கொழுப்பை உட்கொள்வது மற்றும் புகையிலை பொருட்களை கைவிடுவதன் மூலம் அதை PAD ஏற்படாமல் தவிர்க்கலாம் அல்லது நிலைமையை மேம்படுத்தலாம். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். நிறைவுறா கொழுப்புகளை உட்கொள்ள வேண்டும். இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் ஆலிவ், சூரியகாந்தி மற்றும் விதை எண்ணெய்கள் போன்ற தாவர எண்ணெய்களில் காணப்படுகின்றன. தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்வது உயர் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் (2.5 மணிநேரம்) உடற்பயிற்சி செய்வது சிறந்த பலன்களை தரும்.
kidhours – Today Tamil Kids , Today Tamil Kids Health News , Today Tamil Kids Update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.