Wednesday, December 4, 2024
Homeகல்விகட்டுரைஇன்று உலக புவி தினம் ; இயற்கையை காக்கும் இனிய தருணம் !!!

இன்று உலக புவி தினம் ; இயற்கையை காக்கும் இனிய தருணம் !!!

- Advertisement -
இன்று உலக புவி தினம், ஏப்ரல் 22 2021
இன்று உலக புவி தினம், ஏப்ரல் 22 2021

இன்று உலக புவி தினம், ஏப்ரல் 22 2021

- Advertisement -

உலக புவி தினம் 51 ஆவது முறையாக இந்த வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித வாழ்வியலின் அடிப்படையான புவி தொடர்பிலான அவதானம் காலம் காலமாக வௌியிடப்பட்டு வருகின்றது.

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

- Advertisement -

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.

- Advertisement -

1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.

save-the-planet-thinatamil
save-the-planet-thinatamil

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 5-ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது. புவியின் பாதுகாப்புத் தன்மைகளை கருத்தில் கொண்டு 1970 ஆம் ஆண்டு முதலாவது புவி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

புவி தினம் அனுஷ்டிக்க ஆரம்பித்து இன்று 40 வருடங்கள் கடந்துள்ள போதிலும் புவியின் பாதுகாப்பு தொடர்பிலான கருதுகோள்கள் பெருமளவில் அதிகரித்துள்ளனவே தவிர புவி வெப்பமடைதல் போன்ற இயற்கைக்கு ஒவ்வாத காரணிகளை மனிதன் அதிகளவில் செயற்படுத்தியே வருகின்றான்.

புவியின் சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் விசேட நாளாக புவி தினம் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி உருப்பெற்றது.

earth-day-kidhours
earth-day-kidhours

1969 ஆம் ஆண்டு சான்பிராஸ்ஸிஸ்கோ நகரில் இடம்பெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் புவி நாளை அனுஷ்டிப்பது தொடர்பிலான வித்தினை உலக அமைதிக்காக குரல் கொடுத்த ஜோன் மெக்கனல் எனும் மாமனிதர் இட்டார்.

1970 இல் ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுசூழலியல் நிபுணர் கோலார்ட் நெல்சன் சுற்றுசூழலின் மகத்துவத்தை பரப்புவதற்கான சிறந்த நாளாக 1970 ஏப்ரல் 22 ஆம் திகதி அழைப்பு விடுத்தார்.

இந்த நாளில் புவியின் வட கோளப்பகுதி வசந்தமாகவும் தென் கோளப்பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படும்.

நெல்சனின் அழைப்பினை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். அன்று முதல் உலக புவி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

7.8 பில்லியன் மரங்களை எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுவதும் புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது இந்த புவி தினத்தின் கருதுகோளாகும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.