Thursday, January 30, 2025
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்சிறுவர் தொழில் நுட்ப அறிவு

சிறுவர் தொழில் நுட்ப அறிவு

- Advertisement -

ariviyal பட்டாம் பூச்சியின் இறகும் நானோ தொழில் நுட்பமும்!

- Advertisement -

வண்ணங்களை வாரி இறைத்துக் கண்களுக்கு விருந்தளிக்கும் நீல மார்ப்ஹோ (Blue Morpho) வகைப் பட்டாம்பூச்சி அதி நவீன நானோ தொழில்நுட்பத்துக்கு வழிவகுத்துவருகிறது.

சோடியம் வாயு மின்விளக்கு ஆரஞ்சு நிற ஒளியை வெளியே உமிழ்வதன் காரணமாக அது ஆரஞ்சு நிறத்தில் புலப்படுகிறது. தாவரத்தின் இலை, ஒளியைப் பிரதிபலிக்கிறதுதான். அப்படியிருந்தும் அது ஏன் பச்சை நிறமாக மட்டும் காட்சியளிக்கிறது? இலைகளில் உள்ள கிளோரோபில் எனும் பச்சையம் நிறமி பல நிறங்களின் கலவையான சூரிய ஒளியை உள்வாங்கி வெறும் பச்சை நிறத்தை மட்டும் மீண்டும் பிரதிபலிக்கிறது.

- Advertisement -

அதனால் பச்சை நிறத்தில் இலை தென்படுகிறது. தக்காளியின் சிவப்பு, எலுமிச்சையின் மஞ்சள், ரோஜாவின் ரோஸ், கத்திரிப் பூவின் நிறம் என ஏறக்குறைய அனைத்தும் பல்வேறு நிறமிகளின் கைவரிசைதான்.

- Advertisement -

விலங்குகளில் புலியின் தங்கநிறக் கோடுகள், யானையின் கருமை நிறம், வாத்தின் பால்வண்ணம் எல்லாம் மெலனின் எனும் ஒருவகை நிறமி வேதிப் பொருளின் விளையாட்டு. ஆனால், பட்டாம்பூச்சியின் சிறகில் பளபளக்கும் வண்ணம் நானோ தொழில்நுட்ப அமைப்பில் விளைந்த வினோத விளைவு.

எந்த ஒரு நிறமியின் கைவரிசையும் அல்ல. பட்டாம்பூச்சியின் இறகைக் கூர்ந்து கவனித்தால், அதில் மீனின் செதில்போன்ற அமைப்பு உள்ளதைக் காணலாம். ஓடுகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு ஓட்டுக்கூரை வேய்ந்ததைப்போலத் தென்படும். இந்தச் செதில் அமைப்பை சக்தி வாய்ந்த நுண்ணோக்கி வழியே கண்டால், அதில் வினோத நானோ அமைப்புகள் தென்படும்.

சூரிய வெண்மை ஒளி போன்ற பல நிற ஒளிக்கற்றைகள் கலந்து இந்த நானோ இடுக்கில் விழும்போது ஒவ்வொரு நிறமும் தனித்தனியே பிரிக்கப்பட்டு, இந்த நானோ அமைப்பால் பல தனித்துவக் கோணத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட கோணத்தில் வெறும் நீல நிறம்தான் பிரதிபலிக்கப்படும்; எனவே, அந்தக் கோணத்தில் நாம் பார்க்கும்போது இறகின் அந்தப் பகுதி நீல நிறமாகத் தென்படும். அதே பகுதியை வேறு கோணத்தில் பார்த்தால், வேறு நிறத்தில் பளபளக்கும்.

பட்டாம்பூச்சியின் இந்தத் தொழில்நுட்பம் கொண்டு பாடம் படிக்கும் விஞ்ஞானிகள், மிகத்துல்லியமாகச் செயல்படும் நவீன வெப்ப உணர்விகளை உருவாக்குவதில் முனைந்துள்ளனர். புளூ மார்ப்ஹோ வகைப் பட்டாம்பூச்சியின் இறகில் வெப்ப விளைவைப் பெரிதாக்கிக் காட்டும் கார்பன் நானோக்குழாய் வடிவத்தைப் பூசி, நவீன உணர்வியை வடிவமைத்துள்ளனர். புறவெப்பம் மாற மாற இந்த இறகின் நிறமும் மாறுகிறது. வெறும் 0.018oC வெப்ப மாறுதலைக்கூட அளவிடக் கூடிய மிகத்துல்லியமான வெப்ப உணர்விகளை வடிவமைத்துள்ளனர்.

இத்தகைய நுண் உணர்விகள் கொண்டு இரவிலும் காட்சி தரும் வெப்பத் தோற்றுருக் (தெர்மல் இமேஜிங்) கருவிகளைத் தயாரிக்க முடியும். சிவந்து வீங்கி அழற்சியுற்ற உள்திசுக்களைக்கூட இனம் காணும் மெடிக்கல் இமேஜிங் கருவி தயாரித்து, பல நோய்களை முன்கூட்டியே அறிய முடியும். மேலும், இயந்திரத்தில் எங்கெல்லாம் கூடுதல் உராய்வு ஏற்படுகிறது என்பதை அறியும் கருவி, தயாரிக்கப்பட்ட இயந்திரங்களில் எங்கே உள்முறிவு ஏற்பட்டுள்ளது எனக் கண்டுபிடிக்கும் கருவி எனப் பல நவீனக் கருவிகளைத் தயாரிக்கமுடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அழிய விடல் ஆகாது பாப்பா! – பறக்கும் ஜடை அணில்

உலகின் சிறப்பான அதிசயங்களில் ஒன்று’ என இவ் அணில்களை மாமன்னர் அக்பர் வர்ணித்தாராம். ‘அக்பர் நாமா’ என்கிற நூலில் இந்தச் செய்தி உள்ளது. ‘சடை அணில்’ என்றும் ‘பறக்கும் அணில்’ என்றும் இவைகள் அழைக்கப்படுகின்றன. உயிரிகளின் தோற்றம் பற்றிய இயற்கைத் தெரிவுக் கோட்பாடு, இவ் அணில்கள் தோன்றிப் பத்துக்கோடி ஆண்டுகள் ஆவதாக அறிவிக்கிறது.

டைனோசர்கள் வாழ்ந்த யுகத்தில் வலம் வந்த பாலூட்டிகள் இவைகள். பறக்கும் அணில்கள் எனச் சில வெளவால்கள்கூட உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. ஆனால், நிஜமான பறக்கும் அணில் இவைகள்தான்.

பனியிலும் இளவேனில் வெயிலிலும், மரத்தின் உச்சியை விட்டு வேறு மரங்களுக்கு வரிசையாகத் தாவும் கூட்டம். அந்தக் காட்சி, இவைபறப்பதுபோலவே இருக்கும். கம்பளி ஜடாமுடி மெத்தென வால் வரை வளர்ந்து, காஷ்மீரின் அழகாய் ஜொலிப்பதைப் பார்க்க, ஒரு காலத்தில் பெருங்கூட்டம் வரும்.

இந்தியா, பாகிஸ்தான், திபெத், நேபாளம் முதல் ரஷ்யா, சைபீரியா வரை ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் வாழ்ந்தோம். இன்றோ, அவற்றின்நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகிவிட்டது நண்பா. உலக உயிரிகள் பாதுகாப்புக்கான ஐநா அமைப்பின் 2016 அறிக்கையின்படி, இப்போது காஷ்மீரத்தில் மிஞ்சி இருக்கும் மொத்த ஜடாமுடி பறக்கும் அணில்கள் (woolly flying squirrel), 17 ஜோடிகள் மட்டும்தானாம்.

எவ்வளவு வேகமாக இவைஅழிக்கப்பட்டுவிட்ட்டன என்று பார்த்தீர்களா? இந்தியாவை ஆளவந்த வெள்ளையர்கள், இவற்றின்மாமிசத்தைச் சுட்டு சாப்பிடுவதை, ‘காஷ்மீர் விருந்து’ என்று அழைத்தார்கள். இவற்றின்தோலில் உருவாக்கப்பட்ட தொப்பிகளுக்கென்று சிறப்பு வரவேற்பு உள்ளது.
குளிர் காலத்தில், ஐரோப்பியப் பெண்கள் இவற்றின்தோலால் ஆன கையுறைகளை அணிவதைச் செல்வச் செழிப்பின் அடையாளமாக்கினார்கள். இப்படிப் பல காரணங்களால், இவ் அணில்களின் இனமே அழிவுக்கும் முடிவுக்கும் வந்துவிட்டது நண்பா.

இயுபெடரஸ் சினெரியஸ் (EupetaurusCinereus) எனும் உயிரியல் பெயர்கொண்ட இப்பறக்கும் அணில் இனம், பனிச் சறுக்குகளில் லாகவமாகத் தாவி, எத்தகைய குறைவெப்பத்தையும் தாங்கி, லட்சக்கணக்கான தாவரங்களின் விதைகளை இங்கும் அங்கும் பரப்பி, காடுகள் அழியா வண்ணம் வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இனி இவ்இனம் அழிந்தால், காடுகளும் அழிந்து போகும்.

எதிர்காலசந்ததிகள்தான் இவற்றைகாப்பாற்ற வேண்டும். விலங்குகள், பறவைகளின் வாழிடங்களான காடுகளைக் காப்பாற்றுதல், வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட அபூர்வ விலங்குகள் பற்றிய விழிப்பு உணர்வு, குறிப்பாக பேரழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பொருள்களை வாங்காமல் புறக்கணித்தல் ஆகியவையே உடனடித்தேவையாக காணப்படுகின்றன..

இவ் அணில் இனங்கள் உட்பட பேரழிவின் விளிம்பிலிருக்கும் எல்லா உயிரினங்களையும் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

அறிவியல் ரயில்..!

ariviyal train

சுற்றுச்சூழல், அறிவியல், தட்பவெப்ப மாற்ற நிலை, நீர்ப்பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானம் போன்றவற்றை மாணவர்களும் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பிலான சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (science express) எனப்படும் சிறப்பு ரயில் உருவாக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியமத்திய அரசு இதைத் தொடங்கியது. இந்த ரயில் இதுவரையில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கி.மீ தூரத்தைக் கடந்து நானூற்று ஐம்பது ரயில் நிலையங்களுக்கும் மேல் காட்சிக்காக நின்று சென்றிருக்கிறது. ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும் பொதுமக்களும் இதில் அமைந்திருக்கும் அரங்குகளைக் கண்டு களித்துள்ளனர்.

ஜூன் மாதம் 15 – 16 ஆம் தேதிகளில் பாண்டிச்சேரி ரயில் நிலையத்துக்கு வந்திருந்தது. அடுத்து 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் வந்து இருந்தது. மூன்று நாள்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

சயின்ஸ் எக்ஸ்பிரஸ் வடிவமைப்பும் வசதிகளும்:

வெண்மை நிறத்தில் பளிச்சிடும் வெளிப்புறத் தோற்றம், ரயிலின் பக்கவாட்டில் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள், சுற்றுச்சூழல் தட்பவெப்ப மாற்ற நிலை விழிப்பு உணர்வு வாசகங்கள், சோலார் தகடுகள் போர்த்தப்பட்ட ரயிலின் மேற்கூரைகள், ரயில் பெட்டிகள் முழுதும் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமராக்கள் என ஏராளமான ஆச்சர்யங்கள் இந்த ரயிலில் இருந்தன.

ரயில் உட்புற வடிவமைப்பு மிகப்பெரிய அறிவியல் ஆய்வகத்தில் நுழைந்த பிரமிப்பைத் தந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வழிகாட்டி உதவியாளர் உள்ளார். மொத்தமுள்ள பதினாறு பெட்டிகளில், எட்டுப் பெட்டிகள் உயிரினங்கள் தொடர்பானவை. மற்ற பெட்டிகளில் நீர்ப்பாதுகாப்பு மற்றும் சிக்கன மேலாண்மை, தட்பவெப்ப மாற்ற நிலை, தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் பிற அறிவியல் துறைகள் உள்ளன. மேலும், மாணவர்கள் விளையாடி மகிழ கணக்குப்புதிர், அறிவியல் விளையாட்டுகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரைகளில் துறை சம்பந்தமான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மேலும், எளிமையாக அறிவியல் கணிதத்தை விளக்கும் வகையில் மாணவர்களுக்கு செய்முறையாகச் சிறப்பு வகுப்புகளையும் நடத்துகின்றனர்.

அமைந்துள்ள அரங்குகள்:

உயர் தொழில்நுட்பத் துறை, புவி வெப்பமயமாதல், சூரிய மின்னொளிப் பயன்பாடு மற்றும் அதன் மேலாண்மை, நீர் மேலாண்மை, இந்தியாவின் கலாசாரத்தைப் பறைசாற்றும் கங்கைச் சமவெளி, வடகிழக்கு இந்தியா, பாலைவனம், மேற்குத்தொடர்ச்சி மலைகள், கடல் பகுதிகள் மற்றும் சமவெளிகள், கார்பன் வெளியீடு, போக்குவரத்து, பாரம்பர்ய விளையாட்டு போன்றவற்றை விளக்கும்படியான அரங்குகள், கண்களைக் கவரும் வகையில் வண்ண விளக்குகள், கார்ட்டூன் படங்கள், 3டி படங்கள் எனப் பல விதங்களில் அனைத்துத் துறைகளும் கவர்ச்சி மிகுந்ததாய் உள்ளன.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.