Thursday, October 17, 2024
Homeபொது அறிவு - உளச்சார்புசர்வதேச தினங்கள்திருக்குறள் கூறும் உணவு ''உலக உணவு தினம்'' Thiruvalluvar About the Food 

திருக்குறள் கூறும் உணவு ”உலக உணவு தினம்” Thiruvalluvar About the Food 

- Advertisement -

Thiruvalluvar About the Food  கல்வி

- Advertisement -

”அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.”
முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து பின் உண்ணும்உணவை அது செரிக்கும் அளவு அறிந்து உண்டால் உடம்பை நெடுங்காலம் போற்றி வாழலாம்.

”தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.”

- Advertisement -

ஒருவன் தன் பசி அளவினை அறியாமல் அதிகம் உண்டால் நோயும் அளவின்றி வரும்.

- Advertisement -

”அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.”

உண்ட உணவு செரித்ததை அறிந்து உடம்புக்கு மாறுபடாத உணவுகளைத் தெளிவாக அறிந்து நன்றாக பசித்த பின் உண்ண வேண்டும்.

திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். உண்ட உணவு செரித்ததற்கு பின்னால் மீண்டும் உண்ண வேண்டும். உடம்புக்கு மாறுபடாத உணவைத் தெரிந்து அதுவும் செரிக்கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் உடம்பை நீண்ட காலம் போற்றி வாழலாம்.
இதை அறியாததாலா இல்லை மனதில் இருத்தாதலாலா இன்று பல நோய்கள், மருந்துகள் என்று வாழ்க்கை.
பிறகு டயட், டயடீசியன், நுட்ரிசநிஸ்ட், எடை குறைப்பு என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கும் வாழ்க்கைச் செல்வத்தை அறிந்து பயன்படுத்தினாலே ஆரோக்கியமாய் வாழலாம்.

நம் முன்னோர் அறிந்த பலவற்றை ஆராய்ச்சி செய்து இன்று கற்றுக்கொண்டிருக்கின்றனர் பிறர்.
ஜேம்ஸ் கோல்குஹன் (James Colquhoun) இயக்கிய ‘Hungry for change’ என்ற ஆவணப்படம் பார்த்தேன். டயட், எடை குறைப்பு என்று வியாபாரமாக்கி மக்களை மீண்டும் நீண்டும் தங்கள் பொருட்களை வாங்கச் செய்யும் வியாபாரத் தந்திரம் பற்றி அழகாகச் சொல்லியுள்ள படம்.

எளிதாக இருப்பதாலும், எளிதாக கிடைப்பதாலும், கவர்ச்சியான பாக்கெட்டில் வருவதாலும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத பொருட்களை வாங்கி உண்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் படம். இப்படமோ இன்றைய ஆராய்ச்சிகளோ எதுவும் தேவை இல்லை. நமக்கே தெரியுமே. நம் தமிழ்ச் செல்வம் இருக்கிறதே! அதைக் கடைபிடித்தால் என்ன என்று ஆதங்கமாக உள்ளது.

புதுமை நன்றுதான், ஆனால் திருக்குறளும் இன்னும் பல நம் வாழ்வியல் நூல்களும் பழமையானாலும் என்றும் புதியதாய் நன்மை பல கற்றுக்கொடுப்பதாய் உள்ளது. உணர்வோம்! கற்போம்! கற்றதை செயல்படுத்துவோம்! இனிதாய் வாழ்வோம்!

 

Kidhours – Thiruvalluvar About the Food

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.