Thirukural about father தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
குறள் 67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
பொருள்
தந்தை – தகப்பன்
நன்றி என்றால் அறம் என்ற பொருளும் உண்டு. நம்மை என்ற பொருளும் உண்டு. அப்பொருள் இங்கு மிக பொருந்தும். அறம் என்றால் தர்மம் அதாவது கடமையாகும்.
ஆதலால் தந்தை தன் மகனுக்கு ஆற்றக்கூடிய கடமை என்றால் அது கற்றோர்கள் சான்றோர்கள் கூடிய அவையின் முன் அவனை சான்றோன் என நிற்கும் அளவிற்கு மகனை ஆயுத்தமாக்குவதே ஆகும். மகனுக்கு கல்வியும், நற்பண்புகளும் நிறையப்பெற்ற சான்றோனாக ஆக்குவது தந்தையின் கடமை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
இக்கடமையை ஆற்றினால் அதுவே மகனுக்கு ஆற்றும் நன்மையாகும் ஏனெனில் மீன் பிடித்து தருவதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதேச் சாலச் சிறந்தது – நெடுங்காலத்திற்கு நன்மை பயக்கும்.
செல்வம் தேவையில்லையா ? செல்வம் சேர்த்துவைத்தால் நல்லது. ஆனால் செல்வம் சேர்பதற்க்கும் கடினமாக உழைக்க வேண்டும் அதனை பாதுகாக்கக்கவும் உழைக்க வேண்டும். ஆனால் அது நிலையில்லாதது.
மேலும் பலபேருக்கு செல்வதை கொடுத்தப்பதில் மகிழ்ச்சி இருக்காது. செல்வம் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை விட்டு நீங்கலாம். கல்வி அப்படிப்பட்டது அல்ல. நற்பண்புகள் அப்படிப்பட்டது அல்ல. அதனை நம்மைவிட்டு யாரும் எடுக்கமுடியாது.
கல்வி இருந்தால் செல்வத்தை ஈட்டிவிடலாம். கல்வியை சேர்ப்பதில் மகிழ்ச்சி, கல்வியை பாதுகாப்பதில் மகிழ்ச்சி, கல்வியை பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி. மூன்றும் மகிழ்ச்சி. அதனால் தான் செல்வதை கொடுப்பதை விட கல்வியை கொடுப்பது சிறந்ததாகும்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறையும் (அன்னை, தந்தை, ஆசான், இறை) இதனாலே வந்தது.
இவர்தாம் தந்தையென்று மக்களுக்குச் சொல்பவள் தாய் மக்களை, நல்ல ஆசானிடத்தில் சேர்ப்பித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்கக் காரணியும், வாழும் முறைகளைச் சொல்லித்தருபவனும் தந்தை தம் மாணக்கருக்கு கல்வியும், அறிவும் தந்து, உயர் பொருளாம் இறையை அடைய ஆற்றுப்படுத்துபவர் ஆசான்.
தாய் பெற்றாலும், ஆசான் வழிகாட்டியாக இருந்தாலும், தந்தையின் பங்கே மக்களை நெறிப்படுத்தி, வாழ்க்கைப் பாதையில் சரிவர செலுத்துவதால், தந்தையின் கடமையை முன்னிருத்தி இக்குறள் பேசுகிறது.
பிள்ளைகள் பெற்றால் போதுமா? மனிதன் பிள்ளைகள் பெறுவதற்கும் விலங்குகள் குட்டிகளை பெறுவதற்கும் என்ன வேறுபாடு? அந்த கடமைகளை சொல்வதற்காகவே இக்குறள். பிள்ளைகளுடைய அறிவு தந்தையின் பொறுப்பு.
ஏனெனில் தந்தை தான் உணர்வு சாராமல் மகனை நிறுத்துவான். பெண்கள் உணர்வு சார்ந்தவர்கள். போட்டி உணர்ச்சி வரும் (உதாரணமாக மற்றொரு தாயின் குழந்தை ஒரு பாட்டு போட்டியில் வெற்றிபெற்றால் தன் குழந்தையும் வெற்றிப்பெற நினைக்கும் பல தாய்மாறார்களின் மனது.
குந்திக்கும் காந்தாரிக்கும் உள்ள பூசலை பற்றி சொல்லி அறியவேண்டியதில்லை. அவர்கள் எப்படி தன் மகன்களை ஏவினார்கள் என்பதை உலகம் அறியும்).
kidhours – Thirukural about father