Friday, November 22, 2024
Homeதிருக்குறள்திருக்குறள் கூறும் தர்மம்-அறம் Thirukural tamil kids

திருக்குறள் கூறும் தர்மம்-அறம் Thirukural tamil kids

- Advertisement -

thirukural

- Advertisement -

உலகிற்கே அறத்தைக் கற்பித்த திருக்குறளானது தமிழ் உலகின் இணையில்லாப் படைப்பாகும். இத்தகைய பெருமை மிகு குறளினை மறைக்கும் / எதிர்க்கும் முயற்சியினைப் பார்ப்பனியமானது காலகாலமாக மேற்கொண்டுவருகின்றது. `கடவுள்` என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது (அதிகாரங்கள் எல்லாம் பின்நாளில் வகுக்கப்பட்டதே).

திருக்குறளின் சிறப்புகள்

- Advertisement -

வள்ளுவன் குறிப்பிடுவது எல்லாம் இறைவன், தெய்வம் ஆகிய இரு சொற்களே. இங்கு `இறைவன்` என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) . தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும்.

- Advertisement -

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” – (குறள்50)

இங்கு மூத்தோர் வழிபாடே ஒரு வகையில் தெய்வமாகக் காட்டப்படுகின்றது. இத்தகைய இயற்கையோடு ஒன்றிய இறைவன், தெய்வம் என்பவற்றைப் பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கியதே முதல் புரட்டு ஆகும்.
திருக்குறள் குறிப்பிடும் அறத்துப்பாலில் அறம் என்ற சொல் முதன்மையானது. அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்). எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.

thirukural kidhours
திருக்குறள் கூறும் தர்மம்-அரம்

 

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” – (குறள்:35)

அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.

இன்னொரு இடத்தில் வள்ளுவன் “மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும்” என்கின்றார். இதனையே பின்வரும் குறள் காட்டுகின்றது.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” – (குறள்:34)

மணிமேகலையும் அறத்திற்கு விளக்கம் கொடுக்கின்றார்.

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”.

இந்த `அறம்` என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான `Ethics` காணப்படுகின்றது. `தர்மம்` என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் `மனு அறம்` என அழைக்க அவர்களிற்கே நா கூசும் (அதேபோன்றே சனாதன தர்மமும்).

பரிமேலழகர் இத்தகைய சிறப்புவாய்ந்த சொல்லான அறம் என்பதற்குப் பொருந்தா விளக்கம் கொடுக்கின்றார். பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கின ஒழித்தலும் ஆகும்” என்கின்றார். அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு. பிறப்பினடிப்படையிலான வர்ணாச்சிரம சாதிக் கோட்பாட்டினை வலியுறுத்தும் மனுநீதி எங்கே? பிறப்பொக்கும் எனப் பாடி பிறப்பிலடிப்படையிலான வேறுபாடுகளை அறவே களையும் குறள் எங்கே?

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” – (குறள் :972)

அதுமட்டுமல்ல, கொல்லாமையினை வலியுறுத்தும் குறள் எங்கே?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”. – (குறள் :260)

பார்ப்பனர்களை பசுக்களை கொன்று உண்ணுமாறு கூறும் மனுநீதி எங்கே?

“சிராத்தத்தில் வரிக்கப்பட்ட பார்ப்பனன், புலால் உண்ண மறுத்தால், 21 பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான்”. – (மனுநீதி சுலோகம்:35).

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”. – (குறள் : 1039)
என வேளாண்மையினைப் (கமத்தினை) புகழும் குறள் எங்கே? பயிர் செய்தலைப் பாவகரமாகப் பார்க்கும் மனுநீதி எங்கே?

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

 

kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.