Thirukural
கல்வி குறித்தும், கற்றுக்கொள்வது குறித்தும் சிறப்பாகப் பேசும் திருக்குறள் கற்பிக்கும் ஆசிரியர் அல்லது குரு என்பவனின் கடமை, தகுதி போன்றவற்றைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்ற ஆவலுடன் தேடிச்சென்றவனுக்குக் கிடைத்த விடையோ ‘இன்னார்தான் என்று ஒன்றுமில்லை’ என்பதுதான்!
அறிவானும் அறிவிப்பானும்!
கல்வி என்னும் கற்றல் என்பது தனி மனிதனின் முயற்சியால் அடையப்படும் ஒன்று என்பதே திருக்குறள் தரும் செய்தி.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
தானே முயன்று கற்றுக்கொள்ளும் நிலை கை கூடாவிட்டால், கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டாவது அறிவு பெற வேண்டும் என்று சொல்கிறது குறள்.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)
அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும்.
திருக்குறள் ஏன் தனி மனிதர் எவரையும் ஆசிரியனாக, குருவாகப் பேசவில்லை?
ஆசிரியர் என்பவர் இன்னார், அவருக்கான இலக்கணம் இது என்று ஆசிரியரை வரையறை செய்யாமல், யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறது.
சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?
கல்வியைக் குறித்தும், கல்வியால் விளையும் அறிவைக் குறித்தும் விரிவாகப் பேசும் குறளாசான், கற்பித்து அறிவை வளர்க்கும் ஆசிரியரைக் குறித்துச் சிறப்பாக ஒன்றும் பேசவில்லையே!
சற்றே அயர்ச்சியுடன் நூல்களைப் புரட்டிக் கொண்டே மனம் அசைபோட, அந்திக்கருக்கல் வேளையில், பளீரென வயல்வெளியில் உலா வந்தார் கல்வியில் பெரிய கவிச்சக்கரவர்த்தி, கம்பநாடன் என்னும் பேராசான்!
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
kidhours
tamil news,tamil newspaper,tamil news paper,tamil news google,tamil news in sri lanka,tamil news online,tamil news cinema,tamil news sri lanka,tamil news lanka,tamil news,tamil news in live,tamil news for today,tamil news in today,tamil news live,tamil news 7,tamil news movie download,tamil news today,tamil news hindu
tamil news tamil nadu,tamil news movie,tamil news dinamalar,tamil news latest,tamil news today paper,tamil news sri lanka today,tamil news paper today,tamil news live today